பக்கம்:மறைமலையம் 23.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

23

காப்பியம் இயற்றப்பட்ட இரண்டாம் நூற்றாண்டில் அறுவகைப்பட்ட சமயக்கோட்பாடுகளும் ஆங்காங்கு இருந்தன வாயினும். அவற்றுட் ‘புத்தசமயமே' ஏனை யெல்லாவற்றினும் மிக்கிருந்தமை அந் நூலால் நன்கறியக் கிடக்கின்றது. அதற்கு ரு நூற்றாண்டு கழிந்துவந்த மாணிக்கவாசகர் காலத்தும் அங்ஙனம் அறுவகைச் சமயங்களும் ஆங்காங்கிருப்பினும் அவற்றுட் 'புத்த சமயமே' ஏனையெல்லாவற்றினும் மிக்கு நின்றமை.

“புத்தன் முதலாய் புல்லறிவிற் பல்சமயந்

9913

தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்க”

என்று அடிகளே புத்தசமயத்தை முதற்கண் வைத்து அதன் பெயரை எடுத்தோதுமாற்றால் இனிது விளங்கும். மற்று அவர், புத்தசமயம் ஒடுங்கிச் சமணசமயம் மிக்கு ஓங்கிய பின் நூற்றாண்டுகளில் இருந்தனராயின், அங்ஙனமிருந்த திருஞான சம்பந்தர் அப்பர் சுந்தரர் என்னும் மூவருந் தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களுள் அச் சமண் மதத்தவரையுங் குறிப்பிட்டவாறு போற் றாமுங் குறிப்பிட்டிருப்பர். அவ்வாறவர் தாம் அருளிச் செய்த ‘திருவாசகம்’ ‘திருச்சிற்றம்பலக் கோவையார்' என்னும் நூல்களில் ஓரிடத்தாயினும் சமண்மதத்தைக் குறிப்பிட்டுரை யாமையானும் அவர் குறிப்பிட்டுக் கூறியதெல்லாம் 'புத்த சமயம்' ஒன்றேயாகலானும். அவர் சமண்சமயம் மேலோங்கி நிலவியகாலத் திருந்தவர் அல்லரென்பதூஉம், அதற்குமுற் புத்தசமயம் கிளர்ந்து நின்ற காலத்திருந்து அதனை ஒடுக்கியவராவ ரென்பதூஉந் தெளியப்படும்.

இப் புத்தசமயத்தையே அடிகள் ‘மிண்டியமாயா வாதம்' என்று அருளிச்செய்தனர். அடிகள் காலத்தில் ‘மாயாவாதம் என்னுஞ் சொற் ‘புத்தசமயத்'தையே உணர்த்திய தென்பது. 'வாமன்சிவராம்' என்பவர் எழுதிய ‘வடமொழியகராதி'யிலுங் குறிக்கப்பட்டிருக்கின்றது.4 முதலிற் புத்தசமயத்திற்கு பெயராய் வழங்கிய ‘மாயாவாதம்' என்னுஞ் சொல், அப் புத்தசமயம் ஒடுங்கி அதனோ டொப்பதாகிய ஏகான்மவாதம் தலை யெடுத்துப் பரவத் துவங்கியபின் அதற்கும் பெயராய் வழங்கலாயிற்று. தமக்கு மற்றொட்டேயிருந்த இவ் 'வேகான்ம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/32&oldid=1588278" இலிருந்து மீள்விக்கப்பட்டது