பக்கம்:மறைமலையம் 23.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

27

ஒன்றே யென்பார் கூற்றுக்கும் மேற்காட்டிய சொற்றொடரின் புறத்துப் பொருளே பற்றி மாயாவாதத்தையும் சைவசித்தாந்தத் தையும் ஒன்றென்பார் கூற்றுக்கும் யாம் சிறிதும் வேற்றுமை காண்கின்றிலம். இனிச், 'சிவம் ஆதல்' என்பதற்கு மாயா வாதிகள், சிவம் என, உயிர் என இரண்டு தனி முதல்கள் இல; சிவம் ஒன்றேயுளது; இச் சிவம் தன்னகத்திருந்து எழுந்ததொரு மாயையின் வலியாற் பற்றப்பட்டு உயிர்களும் உலகமுமாய்த் தோன்றாநிற்கின்றது. இவ்வாறு தோன்றுமிது வெறுந் தோற்றமேயல்லது உண்மை அன்று; பொய்யாம் இதனை மெய்யாக் கருதுங்காறும் அறியாமை உளதாம்; அவ்வறியாமை யுள தாங்காறும் உயிர்தானும் உளதாம்; இவையெல்லாம் இல்லாத வெறும்பாழ், இவையெல்லாமாகத் தோன்றும் யானே உண்மையில் என்றும் உளதாகிய சிவம் எனக் கருதி அவ்வாறு நிற்றலே உயிர் சிவமாவதாகு மென்று இவ்வாறு உரைப்ப உரைப்பவே, பொய்யாகிய மாயையாற் கட்டுப்பட்டு வறுந் தோற்றமாய் நிற்பதூஉஞ் சிவமே, அத் தோற்றத்தினை னை வெறும் பொய்யென நினைந்த வழி நிற்பதூஉஞ் சிவமே; அச்சிவத்தைத் தவிர வேறேதொரு பொருளும் ல்லை யென்பதே மாயாவாதி களின் முடிந்த கோட்பாடாதல் விளங்கும். அடிகள் திருப்பாட்டிற் “சிவம்ஆக்கி” என்றிருத்த லால், மாயாவாதிகள் கூறும் இக் கோட்பாடிற் சிவம் என்னும் பெயரை யாம் வைத்து அதனை வரைந்தாம்; மற்று மாயாவாதிகளோ சிவம் என்று சொல்லார், 'பிரமம்' என்றே சொல்வர் மாயையாற் பற்றப் படாததே சிவம்எனச் சைவசித்தாந்திகள் ஒருமுகமாய் வற்புறுத்துரைத்தலின், மாயையாற் கட்டுறுத்தப்படும் தமது பிரமத்திற்குச் 'சிவம்' என்னும் பெயரை அவர் வழங்காமை நன்றேயாம். அதுகிடக்க.

அடிக்குறிப்புகள்

75ஆம் பக்கம் முதல் 80ஆம் பக்கம் வரையில்

Prof. Geiger's Mahavamsa, ch. XXI & XXXIII, see also Prof. Rhys Davids' Buddhism pp.233 & 234 and his Buddhist India p. 311.

1.

2.

3.

4.

Ibid. p. 33.

Sir P. Arunachalam's Sketches of Ceylon History, Kings' List 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/36&oldid=1588289" இலிருந்து மீள்விக்கப்பட்டது