பக்கம்:மறைமலையம் 23.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

31

மலமென வழக்கப்படுவவாயின வென்பதூஉம் நன்கு கருத்திற் பதித்தல்வேண்டும்.

னி, அறியாமையைச் செய்யும் மலத்தின் வலியை யொடுக்கி, உயிர்கட்கு அறிவைத் தோற்றுவித்தற் பொருட்டே எல்லாம்வல்ல சிவம் மாயையிற் றிரட்டிய பல்வேறு உடம்பு களையும் அவையிருத்தற்குப் பல்வேறு உலகங்களையும். அவை நுகர்தற்குப் பல்வேறு பண்டங்களையும் ஆக்கிக் கொடுத்திருக் கின்றது. உயிர்கள் வேண்டாதிருக்கையிலும் இவ்வாறெல்லாம் செயற்கரும் பேருதவிகளை அவ்வுயிர்கட்கு ஆற்றிவரும் ன்பவுருவான சிவத்தின் திருவருள் நோக்கம் என்னை யென்றால், அறிவு விளங்கப்பெற்றபின் அவை அம்மும்மலப் பற்றுவிட்டுச் சிவத்தோடு இரண்டறக்கலந்து தாமும் சிவமாய் நிலைபெயராப் பேரின்பவுருவாய் இருக்க வேண்டுமென்பதே யாம். மாயை வினைகளின் உதவியாற் சிறிது சிறிதாக அறியாமை தேய்ந்து அம் முறையே அறிவு விளக்கப் பெற்றபின், எல்லா உயிர்களும் பேரின்பநிலையமாய் விளங்குஞ் சிவத்தைத் தலைக்கூடுதலிலேயே தமது கருத்தை நாட்டி, உலகத்திலும் உலகத்துப் பொருள்களிலும் தம்மைச் சூழ்ந்துள்ளாரிலும் தம்முடம்பிலுந் தம்மிலுஞ் செல்லும் உணர்வை மடித்துத் திருப்பித், தமது உணர்வுக்கு உணர்வாய் நிற்கும் சிவத்திலே படிவித்துச் சிவமாயே அமர்ந்திருக்கும். இங்ஙனம் உயிர்கள் மலத்தினின்றும் நீங்கச் சிவத்தைத் தலைக்கூடிச் சிவமாதலையே, சைவசித்தாந்தம் 'சிவமாதல்' என்னுஞ் சொற்றொடர்க்குப் பொருளாக அறிவுறுத்தா நிற்கும். எனவே மலம் மாயை என்பனவும் அவற்றோடு உடனாய் நிற்கும் பல்வேறு உயிர்களும். இவை யெல்லாவற்றையும் ஊடுருவிக் கொண்டே இவற்றாற் பற்றப்படாது நிற்கும் சிவமும் என்றும் எக்காலத்துமுள்ள ள்பொருள்களே யாமென்ப தூஉம், இவை தம்முள் உயிர்கள் மலமாயையின் பற்றுவிட்டுச் சிவத்தைத் தலைக்கூடுதல் என்பது முன்நின்ற நிலையினின்றும் பெயர்ந்து பின்னொரு பெயரா நிலையைப் பெற்றுப் பேரின்ப வுருவாய் நிற்கும் அத்துணையே யல்லது அவ்வுயிர்கள் தம் முதல் கெட்டு இல்லாத வெறும் பாழாய்ப்போதல் அன்றென்பதூஉம் சைவசித்தாந்தத்தின் முடிந்த கோட்பாடு களாமென்று தெளிந்துகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/40&oldid=1588293" இலிருந்து மீள்விக்கப்பட்டது