பக்கம்:மறைமலையம் 23.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

  • மறைமலையம் - 23

தூயதான உயிரும் தன் முதல் கெடாமல் அச் சிவத்தோடு இரண்டறக் கலந்து நிற்றலையே ‘அத்துவிதமுத்தி' என்று சைவசித்தாந்த நூல்கள் புகலாநிற்கும். இஃது.

“ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகாரம் நீங்கியே

நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே’10

என்று தெய்வத் திருமூலர் அருளிச்செய்தமையால்

நன்குணரப்படும் சிவம் ஒன்றே உளதாயின ‘ஏகம்' என்று கூறுதல் அமையும். சிவமும் உயிரும் தனித்தனி வேறாய்நிற்பின் ‘துவிதம்’ என்று கூறுதலையும்; அங்ஙனம் ஒன்றாயும் இரண்டாயும் நில்லாமற் பிரிவறக் கலந்து நிற்றலால் அவ் விரண்டற்ற நிலையை உணர்த்துதற் பொருட்டே வடமொழிச் சான்றோர்கள் அத்துவிதம்' என்னுஞ் சொல்லை ஆக்கி அதனை “ஏகம் ஏவருத்ரோ நத்விதீயாய தஸ்தே”11 என ஏகர்வேதத்துவம்’ "சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம ஆத்மா”12 என மாண்டூக்கிய உபநிடத்தும், உருத்திர சிவப்பெயர் களோடு தலைப்பெய்து உரைப்பாராயினர். பழைய வடநூல் களுட்போந்த இவ் அத்துவிதச் சொற்குப் பொருள் தேறமாட்டாது. அஃது ‘ஏகம்’ என்றே பொருள்படுமென மற்றையொரு சாராருமாகச் சங்கராசாரியாரை யுள்ளிட்ட உரைகாரரெல்லாம் அதற்குப் பொருந்தாப் பொருள்கூறி இழுக்கினார். மற்றுச் 'சிவஞான போதம்' அருளிச்செய்த ஆசிரியர் மெய்கண்டதேவ நாயானார் ஒருவரே. ‘ஒன்றும் இரண்டும் ஆகா இரண்டற்ற தன்மை' என அதற்கு மய்ப் பொருளுரைத்தார். இவ்வாறு அச்சொல்லின் மெய்ப்பொருள் கண்டமைபற்றியே,

“பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதன் அருள் மேவுநாள் எந்நாளோ

அவரை

அவர்

என்று பிற்காலத்துச் சான்றோரான தாயுமானச் செல்வரும் அத்துவித மெய்கண்டான்' என்று வழுத்தினர். இவ்வாறு ஒன்றும் இரண்டுமாகாமற், சிவத்தொடு இரண்டறக் கலந்த தூய உயிர்கள் சிவவுருவாய் நிற்கும் வீடு பேற்றின் நிலையே, ‘சிவமாதல்' என்னுஞ் சொற்றொடரால் அறிவுறுக்கப் படுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/47&oldid=1588302" இலிருந்து மீள்விக்கப்பட்டது