பக்கம்:மறைமலையம் 23.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

45

அதன்

அவரைப் பற்றுத்லொழிந்து நிற்கும் மல மாயை வினைகளும் உண்டு; முன்னெல்லாம் உயிரைப் பற்றிநின்ற அம் மும்மலப் பிணிப்பு விட்டு உயிர் முதல்வன் அருள் வடிவாய்த் தன்கண் அவ்வருளே முனைத்து நிற்கத் தான் அதன்கட் பிரிவற நின்று பேரின்பம் நுகர்ந்திருக்கும் அத்துணையே முன்னிலைக்கும் பின்னிலைக்கும் உள்ள வேறுபாடா மல்லது பிறிதில்லை யென்பது அறிந்துகொள்க. அருளாற் பற்றப்பட்டு முன்னரே ஆணவமலங் கெடப்பெற்றார்க்குப், பின்னர் அணுஅணுவாய்த் தேய்ந்து கெடுவது அவ்வாணவச் செயலை இன்னுந் தம்முட் சிறிது கொண்டு நிற்கும் மாயை வினைகளின் பற்றேயாதலும், அப்பற்று அறவிடுதற் பொருட்டே உயிர் தான்வேறு இறைவன் வேறென இரண்டாய் முனைத்துக் காணாது அவ்விறைவனரு ளோடு ஒற்றித்து நின்று அதுவாய்க் காணுதலும் ஆகிய வீடுபேற்றின்கண் நிகழும் இந் நுண்ணிய இயல்புகளை ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார்,

66

'அவனே தானே யாகிய அந்நெறி

ஏக னாகி இறைபணி நிற்க

மலமாயை தன்னோடு வல்வினை யின்றே

9913

என்னுஞ் சூத்திரத்திற் குரைத்த பொழிப்பானும். ஆண்டு

“நாமல்ல இந்திரியம் நம்வழியின் அல்லவழி

நாமல்ல நாமும் அரனுடைமை - ஆமென்னின்

எத்தனுவின் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை

முற்செய்வினை யுந்தருவான் முன்"

என்றும்,

“இங்குளி வாங்குங் கலம்போல ஞானிபான்

முன்செய் வினைமாயை மூண்டிடினும் - பின்செய்வினை மாயையுட னில்லாது மற்றவன்றான் மெய்ப்பொருளே ஆயவதனால் உணரும் அச்சு”

என்றும் அருளிய திருவெண்பாக்களானும் அறிந்துகொள்க. இவ்வாறு இறைவனருள்வழி யொன்றிலேயே யுறைந்து நிற்பார்க்குத், தமக்குப் புறத்தேயுள்ள புறப்பொருளுணர்வும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/54&oldid=1588309" இலிருந்து மீள்விக்கப்பட்டது