பக்கம்:மறைமலையம் 23.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

49

யல்லாமல் அவைகளும் இல்லாத வெறும் பொய்ப்பொருள் களாய் ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லை. அறிவில்லாத பருப் பொருள்களே பாழாய் ஒழிதல் ஏலாதாயின் அறிவுருவினதாய் இடத்தானுங் காலத்தானும் வரையறுக்கப்படாத தாம் உயிர் இல்லாத வெறும் பாழாய் ஒழிதல் யாங்ஙனம்? இற்றை ஞான்றை இயற்கைப் பொருணூலாரும் ஏதொரு பொருளும் என்றும் இல்லா வெறும் பொய்யாய்ப் போதல் எக்காலத்தும் இல்லையென்று கட்டுரைத்து விளக்குவர்.

ஆகவே, "இன்று அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை” என்பது ‘நின் திருவருளைப் பெறுந் தகுதிவாய்ந்த இக் காலத்து எனக்கு நின் அருளை வழங்கி அங்ஙனம் அதனை வழங்குகின்றுழியே என்னைப் பொதிந்த ஆணவ இருளையுந் துரந்து பளிங்கினள் நிழலைச் சிறிது சிறிதாகக் குறைத்துப் பின் அதனை இல்லையாக்கி வான்மேல் எழாநின்ற ஞாயிற்றை யொப்ப, என்னுள்ளத்தின்கண் விளங்கித் தோன்றாநின்ற நின் இயல்பினை' எனவும், “நினைப்பு அற நினைத்தேன்” என்பது என்னுள்ளும் புறம்புமாகிய எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்கும் நின்னை, இதற்குமுன்னெல்லாம் புறத்தே நிற்குமவனாக மட்டுங்கருதி முன்னிலைப்படுத்து என்னின் வேறாய் வைத்து யான் நினைந்துவந்தது போலில்லாமல், அங்ஙனம் வேறாய்க் காணும் நினைப்பு முற்றும் ஒழிய, என்னுள் நீயும் நின்னுள் யானுமாய் நிற்கும் அப் பிரிவில்லா நிலையின் இயல்பினை நின்திருவருளாற் கண்டு கொண்ட இக் காலத்தே நின்னருள் வழிநின்ற உணர்வினேனாய் நின்னை நினைப்பே னாயினேன்; அங்ஙனம் நினைந்த வளவானே' எனவும், “நீ அலால் பிறிதுமற்று இன்மை சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந் துறையுறை சிவனே” என்பது 'உரைப்பரும் விளக்கத்தினையாய்த் தோன்றி என்னை நின் வண்ணமாக்கிய உன்னையல்லாமல், மாயை வினைகளுள் வேறு ஏதும் இல்லாததாய், அதுதானும் அது தன்னைப் பற்றிய வுணர்வும் அணுஅணுவாய்க் கழிந்து கழிந்து தேய்ந்து தேய்ந்து போக, எஞ்சி நிற்பது நின்னுணர்வு ஒன்றேயாம். திருப்பெருந் துறையில் விளங்கி யெழுந்தருளிய சிவபெருமானே' எனவும், ஒன்றும் நீ அல்லை அன்றிஒன்று இல்லை யார்உன்னை

நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/58&oldid=1588315" இலிருந்து மீள்விக்கப்பட்டது