பக்கம்:மறைமலையம் 23.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

66

மறைமலையம் - 23

தானவ னாகுஞ் சமாதி கைகூடினால்

ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்

என்று நன்கருளிச் செய்தனர். இனி, இங்ஙனஞ் சிவத்தினியல் பைத் தன்னியல்பாய்க் காணுங் காட்சியையே வடமொழி உபநிடத 'சோகம்பாவனை' எனவும், சித்தாந்த மாமறையாகிய ஆகம நூல் ‘சிவோகம்பாவனை' எனவுங் கூறுமென்பது தெரிப்பார். அவரே,

மறை

“மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்

சென்னினய தான சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே’”23

எனவும் அருளிச் செய்தார். இவ்வுண்மை முடிபை எவரும் விளக்கமாய்த் தெரிந்து கொள்ளும் பொருட்டே மிகத் தெளிவான தமிழில்,

“யாதொன்று பவிக்க நான், அதுவாத லால்உன்னை நானென்று பாவிக்கின் அத்துவித மார்க்கம்உறலாம் ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்துஅருள்செய் எந்தைநீ குறையும் உண்டோ’’24

என்று தாயுமான அடிகளும் அருளிச் செய்தனர். உயிர் இவ்வாறு சிவமாந் தன்மையைப் பெறுதலுக்கு ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார் கருடத்தியானம்' பண்ணி, அரவின்நஞ்சு

தீர்ப்பானை உவமையாகவு மெடுத்துக் காட்டிக்,

“கண்டதை அன்றன் றெனலிட்டுக் கண்டசத்தாய்

அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின் ஒண்கருட சானத்திற் றீர்விடம்போற் றான்”25

என்று அவ்வியல்பைத் தெற்றென விளக்கினமை காண்க. புறத்தே காணப்படும் எருவையின் (கருடனின்) வடிவோடு ஒத்ததொரு மந்திர உருவினை மனத்தாற் கற்பித்துக் கொண்டு, அவ்வுரு விலேயே தன் கருத்தினை நாட்டி அதனை அவ்வண்ணமாக்கிப் பயின்ற மந்திரகாரன், பின் அரவு தீண்டப்பட்டான் ஒருவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/61&oldid=1588318" இலிருந்து மீள்விக்கப்பட்டது