பக்கம்:மறைமலையம் 23.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

59

‘திருமந்திரம்’ ஆறாம் நூற்றாண்டின் இடையில் இயற்றப்பட்ட தொன்றாதலை மேலே விளக்கிக்காட்டினாம். காட்டவே, தேவாரங்கள் பாடப்படுதற்கு முற்றொட்டே ‘திருமந்திரம்’, உண்மை பெற்றாம். தேவாரப் பாட்டுக்களில் ‘மும்மலங்கள்', இருவினையொப்பு' என்பவற்றைப் பற்றிய குறிப்புகள் வெளிப்படையாய்க் காணப்படாவிடினும், தேவாரத்திற்கு முந்திய திருமந்திரத்தில் அவை விளக்கமாகச் சொல்லப் வல்லவோ? மும்மலம் வாட்டுகை

பட்டிருக்கின்றன மாட்டாதார்” எனவும்.

66

1

66

ஆணவம் மாயையுங் கன்மமும் ஆம்மலம் காணும் முளைக்குத் தவிடுமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்று பாசம் பிரித்தே”2

எனவும் ஆசிரியர் திருமூலர் பலவிடத்துங் கிளந்தோதுதலின், திருமூலர்க்கு முன்னரே மும்மல இயல்புகளும் அவற்றின் பெயர்களும் வழங்கினமை நன்கு பெறப்படுதலின், தேவாரத்தில் அவை காணப்படாமை பற்றித் தேவாரத்திற்குப் பின் அவை வழங்கத் துவங்கின வென்றல் ஆராய்ச்சியுணர்வில்லார் கூற்றாம். ன்னும், திருமூலநாயனார்,

"அநாதி பசுவியாத்தி யாகும் இவனை அநாதி வந்த மலம்ஐந்தால் ஆட்டி

993

என்று மலம் ஐந்தாதலுங்கூறி, அவ் வைம்மலம் ஆவன :

66

“ஆணவம் ஆகும் அதீதமேல், மாயையும்

பூணுந் துரியஞ் சுழுத்திபொய்க் காமியம், பேணுங் கனவும் மாமாயை, திரோதாயி காணு நனவின் மலக்கலப் பாகுமே"4

என்பதனால் இவையேயா மென்பதூஉந் தெளியவைத்தார். இவரைப் போலவே அடிகளும் பலவிடங்களில்.

66

மூலமாகிய மும்மலம் அறுக்கும்”

எனவும்,

(கீர்த்தித்திருவகவல், 111)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/68&oldid=1588333" இலிருந்து மீள்விக்கப்பட்டது