பக்கம்:மறைமலையம் 23.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

61

காள்ளா ஏனைச் சமயங்களுள் வேறேதும் அடிகளது கோட்பாடு ஆகாமையும் நன்கு பெற்றாம். ஆகையால், அடிகளை மாயாவாதியாக்க முயலுந் 'தமிழ்வரலாறுடையார்' கருத்து ஒருசிறிதும் நிரம்பாதென விடுக்க.

இனித், தேவார காலத்திற்குமுன் ஆகமங்கள் பரவி வழங்கினவல்ல வென்ற கூற்றை ஆராய்வாம். தேவாரத்தில் ஆகமத்தைப் பற்றிய குறிப்புச் சிறுபான்மையுண்டென்று உடன் பட்டவர், அச் சிறுபான்மைபற்றி அதன் வழக்கமும் அஞ்ஞான்று சிறுபான்மைத்தாதல் வேண்டுமென்று கருது கின்றார். தேவாரத்தில் ஆகமக்குறிப்புக் காணப்படுதலால் தேவாரகலத்திற்கு முன்னரே ஆகமம் உண்டென்பது பெற்றாம். திருவிற்கோலத் திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் "தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம், வகுத்தவன் என்று அருளிச்செய்திருத்தலே அதற்குச் சான்றாம். இவ்வுண்மை பெறப்பட்டபின், தேவார காலத்திற்கு முன் ஆகமங்கள் பரவி வழங்கிய துண்டோ இல்லையோ என ஆராய்ந் துறுதிப்படுத்தல் வேண்டின், தேவாரத்தில் அதுபற்றிக் காணப்படுஞ் சிறுபான்மைக் குறிப்பு ஒன்றே கொண்டு அம் முடிபுக்கு வராமல், வேறு பழைய நூல்களிற் காணப்படுங் குறிப்புகளையுஞ் சான்றாகக் கொண்டே அம்முடிபினைக் காட்டல் வேண்டும். தேவாரத்திற்கு முற்பட்டுக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடையில் இயற்றப்பட்டதென மேலே காட்டப்பட்ட திருமந்திர நூலின் இடையே ஐந்தாந்தந்திரத்தில், “ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு

66

மோகமில் நாலேழும் முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே”5

என்று போந்த திருப்பாட்டால், முதலில், ஒன்பது வகையாய்த் தோன்றிய ஆகமங்களிலிருந்து பின்னர் இருபத்தெட்டாகமங்கள் பிறந்து வழங்கினவென்பது பெறப்படுகின்றது. திருமூலநாயனார் காலத்தில் இருபத்தெட்டாகமங்கள் வழங்கினவாயின் அவை தம்மைச் சிறுபான்மை வழக்கம் எனக் கூறுதல் யாங்ஙனம் பொருந்தும்? ஆகமம் எனப்பெயரிய நூல் ஒன்றே இருந்ததாயின் அதனைச் சிறுபான்மை வழங்கியதெனக் கூறல் ஒருவாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/70&oldid=1588341" இலிருந்து மீள்விக்கப்பட்டது