பக்கம்:மறைமலையம் 23.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

63

ஏன்னறால், உலகத்தாரும் அறிவடையாரும் கைக்கொண் ழுகும் உண்மைகளை, அவற்றிற்கு மாறாய்ச் சிலர் தோன்றி அவற்றை மறுத்தாலன்றி, அவ்வுண்மைகளை வழக்குநெறி வழுவாது வினாவிடைகளால் விரித்து விளக்கவேண்டுங் க

வேண்டப்படாமையால் என்க.

ன்

கடவுளுண்டு, உயிருண்டு, உயிரைப்பற்றிய மலம் உண்டு. உயிரெடுக்கும் பிறவிகள் உண்டு. அப் பிறவிகள் உலவும் உலகம் உண்டு. மலத்திற் றீர்ந்த உயிர் கடவுளைச் சார்ந்து இன்பநுகர்த லுண்டு என்னும் உண்மைகள் எல்லா மக்களிடத்தும் இயற்கையே காணப்படுங் கோட்பாடுகளாகும்; இவைகளை மறுப்பார் இல்லாத காலங்களில் தோன்றிய நூல்களில் இவ் வுண்மைகள் மட்டுங் காணக்கிடக்குமேயல்லாமல் இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் காணப்படா. இம் முறைமைக்கு இசையவே, பௌத்த காலத்திற்கு முற்பட்ட வடநூல் தமிழ்நூல்களில் இக் கோட்பாடுகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் காணப்படுகின்றில. பௌத்த சமயந் தோன்றிக் கடவுள் உயிர் மலம் முதலான மெய்ப்பொருள்களை இல்லாத வெறும் பாழ் என மறுக்கப் புகுந்தபின்னரே, அது கூறும் மறுப்புரைகளை ஆராய்ந்து அவற்றின் உண்மையை நாட்டும் நூல்கள் ாயின. ளத்த

வடமொழி தென்மொழிகளில் உண் ண் காலத்திற்கு முற்றோன்றிய வடநூல்கள் ‘இருக்கு’, ‘எகர்’, ‘சாமம்’, முதலான மந்திரப்பகுதிகளும் அவற்றின்கட் சொல்லிய வேள்விமுறைகளை விரிக்கும் ‘சதபதம்’ ‘தைத்திரீயம்' முதலான பிராமணங்களும், ‘ஈச’, ‘கேந முதலான உபநிடதங்களும் பிற சிலவுமாம்; ஏனை நூல்களெல்லாம் பெரும்பாலும் பௌத்தகாலந் தொட்டே விரிந்தனவாகும்.

இனி, வடநாட்டிற் பிறந்த பௌத்த சமண மதங்கள் அந் நாட்டிற் பெரிதும் பரவினாற்போல், அவை தோன்றியபின் நெடுங்காலம் வரையில் தென்னாட்டிற் பரவாமையானும், அவை அங்ஙனம் தென்னாட்டிற் பரவத் துவங்கியதும் கிறித்து பிறந்த முதல் நூற்றாண்டு துவங்கி ஏழாம் நூற்றாண்டுவரை யிலாகலானும் அப் பௌத்த சமண மறுப்புரைகளை எதிர்த்துக் கடவுளுண்மையை நாட்டப்புகுந்த ‘ஆகமம்,’ ‘திருவாசகம்,’ ‘திருமந்திரம்,' ‘ஞானமிர்தம்,’ ‘தேவாரம்,’ ‘சிவஞானபோதம்' முதலான தமிழ் நூல்களெல்லாம் கி.பி. முதல் நூற்றாண்டிற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/72&oldid=1588343" இலிருந்து மீள்விக்கப்பட்டது