பக்கம்:மறைமலையம் 23.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

73

காலத்தில் வடமொழிச் சிவாகமங்கள் வழங்கினவாயின் அவற்றை எடுத்துரையாது விடார். அற்றாயினும், ‘ஆகமம்’ எனப் பெயரியநூல் திவாகரமுனிவர் காலத்தில் இருந்த தென்பதற்கு,

66

“ஆகமம் பனுவல் ஆரிடஞ் சமயம்

9977

சூத்திரம் ஐந்தும் நூலினைத் துலக்கும்’"

என்று அவர் கூறுதலே சான்றாமாகலின், அக்காலத்தில் ஆகமப்பெயரால் வழங்கிய மெய்யறிவுநூல்கள் தமிழிலேயே இருந்தனவென்பது தேற்றமாம்.

13

அற்றேற், காமிகம், காரணம், வீரம், சிந்தம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் முதலிய ஒன்பது ஆகமங்களைத் திருமூலர் எடுத்தோதுதல் என்னையெனின்; இஞ்ஞான்று வழங்கும் இருபத்தெட்டுச் சிவாகமங்களுட் சேராத 'யாமளம்' 'காலோத்தரம்' என்னும் இரண்டையுஞ் சேர்த்துக் கூறுதலின். இவ்வொன்பது ஆகமப்பெயர்களை மொழிந்த 'பெற்றநல் லாகமம்' என்னுந் திருமந்திரப்பாயிரச் செய்யுள்2 திருமூலர் செய்ததாகது. ஆசிரியர் திருமூலநாயனார் திருமந்திரம் மூவாயிரஞ் செய்யுட்களே அருளிச்செய்தன ரென்பது ‘முன்னியவப் பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ் சாத்தி’3 என்று சேக்கிழார் அருளிச்செய்தவாற்றால் அறியக் கிடக் கின்றது. இப்போதுள்ள திருமந்திரத்திலோ நாற்பத்தேழு செய்யுட்கள் மூவாயிரத்திற்குமேல் மிகுதியாய்க் காணப்படு கின்றன. மேலும், திருமந்திரத்தின் முதற்செய்யுள் “ஒன்றாவன் றானே”எனத் தொடங்குவததேயாமென்பது இனிது புலப்படச் சேக்கிழார் “ஏன ஏனவெயி றணிந்தாரை ஒன்றாவன்றான் எனவெடுத்து”“ என்று கூறுமாற்றாற் பெறப்படுகின்றது. மற்று, இஞ்ஞான்றைத் திருமந்திரத்திலோ, "ஒன்றவன் றானே என்னுஞ் செய்யுளுக்குமுன் “போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை" என்னுஞ் செய்யுளும், அதற்குமுன் யானை முகக்கடவுள் காப்பாகிய "ஐந்து கரத்தனை” என்னுஞ் செய்யுளுங் காணப்படுகின்றன. திருமூலர் திருமந்திரத்திலும், அவர்க்கு முற்பட்ட மாணிக்கவாசகர் திருவாசகந் திருக்கோவை யாரிலும், அவர்க்கு முற்பட்ட சங்கத் தமிழ் நூற்களிலும் யானைமுகக் கடவுளாகிய பிள்ளையாரைப் பற்றிய

66

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/82&oldid=1588353" இலிருந்து மீள்விக்கப்பட்டது