பக்கம்:மறைமலையம் 23.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் - 23

L

'நிருத்தம்' என வழங்கிவருகின்றது. இனிக், 'கல்பம்' என்பது வேள்விச் சடங்குகள் ஆற்றும் முறையினை வகுத்துக் கூறுவது. க் கல்பத்தின் முதன்மையாவனவும் விரிந்த பகுதியாவனவும் சிரௌத சூத்திரங்களே' யாகும். இவையும் ஒவ்வொரு வேதத்திற்குந் தனித்தனியே யுண்டு. இருக்குவேதத்திற்கு உரியவை ‘சாங்காயன சிரௌத சூத்திரமும்' ‘ஆகவலாயன சிரௌத சூத்திரமும்’ என இரண்டாம்; இவை முறையே சாங்காயன ராலும் ஆசுவலாயனராலும் இயற்றப்பட்டன வாகும். இனிச், 'சோதிடம்’ என்பது வேள்விகள் ஆற்றுதற்கு இசைந்த கோள்நிலை காலநிலைகளை வகுத்துக் கூறுவது பழைய வேதகாலத்தில் எழுதப்பட்ட சோதிட நூல் ஒன்றும் இப்போது அகப்படவில்லை. இவ்வாறு எழுத்துச் சொற்பொருள் யாப்பு வேள்விச் சடங்கு கோள் நிலை முதலியவற்றை ஆராய்ந்து அறிவுடையோர் ஆக்கிய கருவி நூல்களை யெல்லாம் யெல்லாம் இறைவனே ஆக்கினானென்றால் முகமனுரையே யல்லாமற் பிறிதன்றென்பது சிறிதறிவுடை யார்க்கும் விளங்கற் பாலதேயாம். "அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லைச் சிந்தாமணி உம்பரார் அறியா மறையோன்” என்னுந் திருக்கோவையார் செய்யுளிற் போல, உலகத்தில் நம்மால் அறியப்பட்ட உயர்ந்த பொருள்களை அன்பின் மிகுதியாற் கடவுளாகவும் கடவுளுக்கு உவமையாகவும் எடுத்துச்சொல்லத லோடொப்ப, உலகத்தின்கண் அரியபெரிய நூல்களாகப் பாராட்டப் படுவனவற்றை யெல்லாம் கட வு அருளிச் செய்தானென்றல் அருமுகமனேயாம் அற்றன்று. தூய உள்ளத்தினர் பால் முனைத்து நின்று அவரறிவினை இறைவன் ளக்கி நின்று அவர்க்கு எல்லா உண்மைகளையும் புலப்படச் செய்தலின், அங்ஙனம் இறைவ னருள்வழிநின்ற ஆசிரியர் அருளிச் செய்வனவற்றையெல்லாம் இறைவனருளிச் செய்தா னென்றலே முறையாமாலெனின்; அவ்வா றுரைப்பின், அவ் வாசிரியன்மாராகிய உயிர்கள் எல்லாம் அறிவுடையன என்பது போய் அறிவற்ற இயந்திரங்களே (பொறிகளே) யாமெனவும் அறிவற்ற அவை செய்யும் நல்வினை தீவினைகளுக்கு அவை யுரியவல்லவாமெனவும், இவ் வுலகத்தைப் படைத்தல் காத்தல் முதலாக இறைவன் செய்யுந் தொழில்களெல்லாம் எவர்

ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/91&oldid=1588363" இலிருந்து மீள்விக்கப்பட்டது