பக்கம்:மறைமலையம் 23.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

89

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவ னடிசேரா தார்”

என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிச்செய்தார்.

திருமூலரும்,

66

'வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர் ஊனப்பிறவி ஒழிக்கும் ஒருவனை'

(21)

என் று அருளிச்செய்தார். ஆரியருள் மீமாஞ்சகரும் உயிர்களைக் கொன்று வேட்கும்வேள்வி யொன்றானே வீடுபேறு கைகூடும், இதன்பொருட்டு இறைவன் எற்றுக்கு, இறைவன் ஒருவன் இலன் என்றலே உண்மையாம் எனக் கூறினாராகலின், அவரது தீய கோட்பாட்டை மறுத்தற் பொருட்டே திருள்ளுவர்.

66

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று’

எனவுங்,

وو

"கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன் நற்றான் தொழாஅ ரெனின்

எனவும் அருளிச்செய்தார். இதனோடொப்பவே திருமூலரும்,

“ஓமத்துள் அங்கியின் உள்உளன் எம்இறை"

என்றும்,

“கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை

99

(222)

(198)

என்று அருளினார். பௌத்தர், பிறராற் கொல்லப்பட்ட தன் ஊனைத் தின்னலாமென்று சொல்லி அதனை அயின்று வந்தமையானும், ஆரியப்பார்ப்னரும் வேள்வி வேட்கின்றோம் என்று கூறிக்கொண்டு எண்ணிறந்த உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை விழுங்கி வந்தமையானும் அவ் விருவர்தங் கொடுஞ்செயல் களையும் ஒழித்தல் வேண்டியே திருவள்ளுவர், “தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/98&oldid=1588380" இலிருந்து மீள்விக்கப்பட்டது