பக்கம்:மறைமலையம் 24.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

  • மறைமலையம் - 24

சமண் அரசனால் அவர்க்கு உடனே விளைவிக்கப்பட்டன வென்பதற்குச் சேக்கிழார்,

இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை யெய்தி மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரிற் புன்மையேபுரி அமணர்தாம் கேட்டது பொறாராய்

(திருநாவுக்கரசு நாயனார் புராணம், 79)

என்று அருளிச்செய்தவாற்றாற் புலனாம். சமண் அரசன் தான் இழைப்பித்த பல கொடுந் தீங்குகளும் அப்பரை ஒரு சிறிதும் ஊறுபடுத்தாமை கண்டு, கடைப்படியாக அவரை ஒரு பெருங்கற்பாறையிற் பிணிப்பித்துக் கடலில் இடுவித்தனன். அப்பரோ ஆண்டவன் சுரந்த பேரருட் டுணையால் அக் கல்லையே புணையாகப் பெற்று மிதந்து திருப்பாதிரிப்புலியூர்ப் பக்கத்துள்ள கடற்கரையைச் சேர்ந்து கரைமீதேறி அவ்வூரிலுள்

ளாராற் பெரிதும்வியந்து பணிந்து வரவேற்கப்பட்டு,

அங்கேயுள்ள திருக்கோயிலிற் சிவபிரானை

வணங்கி

அவன்றிருவடிக்கு, “ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய்” என்னுந் தீந்தமிழ்ப் பதிகமாலை சாத்திப், பின்னுந் திருவதிகை வந்துசேர்ந்து திருத்தாண்டகச் செந்தமிழ் பாடியபடியாய் அங்கே உழவாரத் திருப்பணி செய்துகொண்டு சிலநாள் வைகினார். இவரைப் பல கொடும் பொல்லாங்குகளால் வருத்திய சமண்வேந்தனான ‘மகேந்திரவர்ம பல்லவன்”

தான்

கடைப்படியாக இழைப்பித்த தீங்குக்கும் அரசுகள் தப்பிக் கரையேறினா ரென்பது கேட்டதுணையானே, அவரது பெருமையுஞ் சிவபிரான் றிருவருள் அவர்க்கு உறுபெருந் துணையாய் நின்று தான்செய்வித்த தீங்குகளையெல்லாம் பாழ் படுத்தியதும் உணர்ந்து, நல்வினையால் உளந்திருந்தித் திருவதிகை சென்று திருநாவுக்கரசரின் திருவடி மலர்களில் வீழ்ந்து, அவரது கடைக்கண் நோக்கம் பெற்றுச் சமண்மதம் பொய்யாதலுஞ் சைவசமயமே மெய்யாதலும் உணர்ந்து சிவபிரான் றிருவடிக்கு ஆளானான்.இந் நிகழ்ச்சிக்குப்பின் அப்பர் திருவதிகையினின்றும் புறப்பட்டுச் சிவபிரான் திருக்கோயில்களுள்ள பதிபலவுஞ் சென்றிறைஞ்சுதற்கு விழைவுமீதூரப் பெற்றாரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/233&oldid=1590862" இலிருந்து மீள்விக்கப்பட்டது