பக்கம்:மறைமலையம் 24.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

  • மறைமலையம் - 24

4

மாகாணத்தின் கண்ணதான ‘பாடலிபுத்திரம்' என்னும் நகரிற் சமண்முனிவர்க்குப் பெரியதோர் உ றையுளாயிருந்த பெருஞ்சமண்பள்ளியினை இடித்து, அதன்கட் பெற்ற கருவிகளைக் கொண்டு தன்சிறப்புப் பெயர்களில் ஒன்றான குணபரன் அல்லது குணதரன்’ என்னும் பெயராற் குணதரேச்சுரம்' என்னுஞ் சிவபிரான் திருக்கோயிலைத் திருவதிகையிற் கட்டுவித்தான்; இது.

வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்திலமண் பள்ளியொடு பாழிகளுங்

கூடவிடித் துக்கொணர்ந்து குணதரவீச் சுரமெடுத்தான்.

5

என்று ஆசிரியர்சேக்கிழார் கூறுமாற்றானும் அறியப்படும். அதுவேயுமன்றித், திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு முதலான மாகாணங்களிலுள்ள மலைகள் பலவற்றைக் குடைந்து அவற்றின்கட் சிவபிரானுக்குத் திருக்கோயில்களும் அமைப்பித்தான். இவ்வாறு இவன் சைவ சமயத்தைத் தழுவியபின் பல திருக்கோயில்களை அமைப்பித்தற்கு ஐந்தாண்டுகளேனுஞ் சென்றதாகல் வேண்டும். வனது அரசு கி.பி. 625 -ஆம் ஆண்டோடு முடிவுபெறுதலால், இவன் சைவசமயத்தைத் தழுவியது கி.பி. 620 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகல் வேண்டும். அவ் வாண்டிலேயே திருநாவுக் கரசருஞ் சமண்மதந் துறந்து சைவசமயம் புகுந்தாராகல் வேண்டும்; புகுந்த இரண்டு ஆண்டிற்குள்ளெல்லாம் அவர் திருஞான சம்பந்தப் பருமானைச் சீர்காழியிலே வந்து கண்டு வணங்கினமையினை மேலே விளக்கிக்காட்டினாம். அக்காலையிற் சம்பந்தப் பெருமான் நாலாண்டு சென்ற சிறு மதலையாகவே இருந்தனரென்பது சேக்கிழாரடிகள் அஞ்ஞான்று நிகழ்ந்த வரலாறுகளை எடுத்துரைக்கு மாற்றால் துணியப்படும். அதன்பிற் சில திங்கள் கழித்து அப்பருந் திருஞானசம்பந்தருந் திருப்புகலூரில் ஒருங்கு கூடியபோது, அவர்கள்பாற் சிறுத்தொண்ட நாயனார் வந்து அவர்களை வணங்கி அவர்களோடு அளவளாவி யிருந்தன ரென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/239&oldid=1590869" இலிருந்து மீள்விக்கப்பட்டது