பக்கம்:மறைமலையம் 24.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

சைவ

  • மறைமலையம் - 24

இனி, அப்பரும், அவரைத் துன்புறுத்தி அவரது அருளாற் சமயந்தழீஇய முதலாம் மகேந்திரவர்ம பல்லவ வேந்தனுஞ் சமண்மதப் பற்றுவிட்டுச் சிவபிரான்றிருவடிக்கு ஆளான காலங் கி.பி.620 ஆம் ஆண்டிலேயாமென்பதை மேலே நன்கு விளக்கிக் காட்டினாம். அப்பர் முதன்முதற் சீர்காழிக்குப்போந்து திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்டது கி.பி. 622 ஆம் ஆண்டிலேயாமென்பதூஉம் மேலே விளக்கினாம். அப்போது திருஞான சம்பந்தப் பிள்ளையார் நாலாண்டுடைய தெய்வச் சிறுமதலை யாயிருந்தனர். அதன்பிற் சிறுத்தொண்ட நாயனாரையும் அவர்தஞ் சிறுபுதல்வர் சீராளரையுங் கண்டபோது பிள்ளையார்க்கு நாலரையாண் டாயிற்று. அதன்பின் அப்பருடன் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளி, அங்கு நின்றும் திருவாலவாய்க்கு எழுந்தருளி மங்கையர்க்கரசியாரையும் அவர் தங் கொழுநரான கூன்பாண்டிய மன்னனையுங் கண்டபோது பிள்ளையார்க்கு ஐந்தாமாண்டு நிரம்பிற்று. எனவே, கி.பி. 623 ஆம் ஆண்டிலேதான் பிள்ளையார் ஐந்தாட்டைச் சிறுவரா யிருந்தூஉங், கூன்பாண்டியனைக் கண்டதூஉமாகும்.

L

அப்பரைப் பிரிந்து

இக் கி.பி. 623 ஆம் ஆண்டு கூன்பாண்டிய வேந்தனது ஆட்சியின் துவக்ககாலமோ இறுதிக்காலமோ வெனின்; இஞ்ஞான்றை வரலாற்று நூலாசிரியராற் சிறந்த சான்று களாகக் கொண்டாடப்படுங் கல்வெட்டுகளைக் கொண்டு,இவ் 623 ஆம் ஆண்டு அவ்வரசன்றன் ஆட்சிக்காலத் துவக்க மாதலைக் காட்டுவாம்: யானைமலைக் குகையின்கட் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இரண்டினால் 'ஜடிலபராந் தகன்' எனப்படும் 'மாறன் சடையன் பராந்தகன்' என்பான் கி.பி. 770 இல் அரசு வீற்றிருந்தமை துணியப் படுகின்றது. வேள்விக் குடிநன்கொடைப் பட்டையத்தானும், சின்னமனூரிலக்கப்பட்ட சிறிய பெரிய செப்பேடுகளானும் இம்‘மாறன் சடையன் பராந்தகன்” என்னும் பாண்டி மன்னனுக்குமுன் அவன்றந்தை 'தேர்மாறன் அரிகேசரி பராங்குசன்” என்னும் ‘முதலாம் ராஜசிம்ம' பாண்டியனும், அவனுக்குமுன் அவன்றந்தை யாகிய 'கூன்பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்” என்னும் ‘அரிகேசரி மாறவர்மனும்’ அரசு புரிந்தமை தெளியப் பட்டிருக்கின்றது. இவ்வாறு ஜடிலபராந்தகனையும், அவற்கு முன் அரசாண்ட

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/243&oldid=1590873" இலிருந்து மீள்விக்கப்பட்டது