பக்கம்:மறைமலையம் 24.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

  • மறைமலையம் - 24

நந்தன் வெறுக்கை யெய்தினும்

எனவும்,

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை

நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ

(251)

(265)

எனவுங் கூறக்காண்டலின், அவ் வடநாட்டுச் செய்தியும்,

அதனையடுத்து

நிகழ்ந்த

மோரியரது

தென்னாட்டுப் படையெடுப்பும் மாமூலனார்க்கு முந்நூறாண்டு முற்பட்டன வாதல் ஐயுறவின்றித் துணியப்படும் என்க.

6

மேலும் மோரியரது படையெடுப்பினையும், அம்மோரிய அரசர்க்குமுன் பாடலிபுரத்தை ஆண்ட நந்த அரசரது பெரும் பொருட்டிரளையும், அப் பொருட்டிரளை அவர் கங்கை யாற்றின் அடிப்படையில் மறைத்துவைத்த வரலாற்றையும் ஆசிரியர் மாமூலனார் பிழைபடாது உரைப்பக்காண்டலின், இவர் தங் காலத்துக்கு முற்பட்ட வடநாட்டு நிகழ்ச்சிகளை நன்குணர்ந்தவராகவே காணப்படுகின்றார். இங்ஙனமிருக்க, கி.பி. 320 ஆம் ஆண்டிற் றுவங்கிய ‘குப்தமரபுக்'கு முதல்வனான மற்றொரு சந்திரகுப்தனின் மகனான சமுத்ர குப்தன் என்பான் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்துப்போந்த செய்தியினையே பிழைபாடாக 'மோரியரது' படையெடுப்பென்று கருதி ஆசிரியர் மாமூலனார் பாடிவிட்டனரெனச் சேரன்செங்குட்டுவன்' நூலார் அவ் வாசிரியர்க்கு ஓர் அறியாமையேற்றினார். கிறித்து பிறப்பதற்கு 322 ஆண்டுகட்கு முன் சந்திரகுப்தனைத் தலைவனாய்க்கொண்டு துவங்கிய மரபே 'மோரியவமிசம்’ எனப்பட்டதென்பதும், கிறித்து பிறந்தபின் 320 ஆம் ஆண்டில் மற்றொரு சந்திரகுப்தனைத் தலைவனாய்க் கொண்டு துவங்கிய மரபோ 'குப்தவமிசம்' எனப்பட்ட தென்பதும் வரலாற்று நூலாராற் பகுத்துவைத்துக் காட்டப்பட்டதோர் உண்மையாம். கி.பி. 320 இல் துவங்கிய மரபுக்கு ‘மோரியவமிசம்' என்னும் பெயர் வழங்கப்பட வில்லையென்பது 'சேரன்செங்குட்டுவன்” நூலாரும் உடன்பட்டதொன்றாம். ஆசிரியர் மாமூலனார் தாமிருந்த காலத்திற் படையெடுத்துப்போந்த மன்னன் குப்த மரபினைச் சேர்ந்தவனாயிருப்பின் அதனை அவர் எளிதிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/25&oldid=1590477" இலிருந்து மீள்விக்கப்பட்டது