பக்கம்:மறைமலையம் 24.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

241

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் “தடுமாறு நெறியதனைத் தவமென்று தம்முடலை யடுமாறு செய்தொழுகும் அமண்வலையில் அகப்பட்டு விடுமாறு தமிழ்விரகர் வினைமாறுங் கழலடைந்த

66

66

நெடுமாற னார்பெருமை யுலகேழு நிகழ்ந்ததால்”

'அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே

தென்னாடு சிவம்பெருகச் செங்கோலுய்த் தறமளித்துச்

சொன்னாம நெறிபோற்றிச் சுரர்நகர்க்கோன் றனைக் கொண்ட பொன்னார மணிமார்பிற் புரவலனார் பொலிகின்றார்.'

ஆயவர சளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடன்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங் காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார்”

எனக் கூறிய செய்யுட்களால் இனிது விளங்கா நிற்கின்றது. இந்நெல்வேலிப் போர் கி.பி. 630 ஆம் ஆண்டில் நடைபெற்றமை மேலே நன்குவிரித்து விளக்கப்பட்டமை யின், திருஞானசம்பந்தப் பெருமான் மதுரை மாநகர் சென்று அந் அந் நெடுமாற பாண்டியனைக் கண்டதூஉம், அவர் தந் திருவருளால் அவன் சமண்மதந் துறந்து சைவசமயந் தழுவியதூஉஞ், சமணர்கள் சம்பந்தப் பெருமானோடு வழக்கிட்டு தோற்றதூஉமாய நிகழ்ச்சிகளெல்லாம் அப்பாண்டி வேந்தன்றன் ஆட்சி துவங்கி இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றபின் அஃதாவது கி.பி.623 ஆம் ஆண்டில் நிகழ்ந்தனவாதல் வேண்டுமென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கற்பாலதா மென்க.

இனி, இவ்வாராய்ச்சியின் முடிபாகப் பெறப்பட்ட உறுதிப் பொருள்களொடு, 'தமிழ்வரலாறுடையார்” கூறும் வேறு சில கூற்றுக்களும் முரணி யுண்மை யல்லாதன வாய்ப் பாழ்படுதலும் ஈண்டுக் காட்டற்பாலன. திருஞான சம்பந்தப் பெருமான் மதுரைக்குச் செல்லுமுன்னரே, அவரைக் கி.பி.622 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசு நாயனார் சீர்காழியில் வந்து கண்டமையும், அப்போது நாயனார் எழுபதாண்டுக்கு மேற்பட் முதுமைமிக் கிருந்தமையும் மேலே உண்மைச் சான்றுகளால் நிலைபெறுத்தப் பட்டமையின், திருஞான சம்பந்தப் பெருமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/250&oldid=1590880" இலிருந்து மீள்விக்கப்பட்டது