பக்கம்:மறைமலையம் 24.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

  • மறைமலையம் - 24

அற்றேலஃதாக, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதாகப் புலப்படும். 'புறப்பொருள் வெண்பாமாலை' யிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்காட்டும் இளம்பூரணர், அவ்வாற்றால் ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னிருந்தமை தற்றென விளங்குதலின், 'திருச்சிற்றம்பலக் கோவையார்' அவர்க்கு முன்னமே இயற்றப்பட்ட தொன்றாயின் அவர் அதன்கணுள்ள அகப்பொருட்டுறைகளைத் தமது தொல் காப்பிய வுரையில் எடுத்துக் காட்டாமை என்னையெனின்; 'தொல்காப்பியம்’ எம் மதத்தவராலும் பயிலப்படுந் தமிழ்மொழி யிலக்கணங்களை வகுத்துக் கூறும் பொது நூலாகலின், அதன் உரையிற் சைவ சமயத்தவராற் பெரிதும் பாராட்டப்படுந் திருச்சிற்றம்பலக் கோவையார் நூற்செய்யுட் களை எடுத்துக்காட்ட உரையாசிரியர் எவரும் ஒருப்பட்டிலர். முதல்நூல் எழுதிய ஆசிரியர் தொல்காப்பிய னாருங்கூடத் தமது நூல் ‘தொல்காப்பியம்' எல்லார்க்கும் பொதுவாதல்

பற்றியே அதன் முகத்திற் கடவுள்வணக்கம்

ஏதுமே கூறாதுவிட்டார். பிற்காலத்தார்க்கு இலக்கண நூலெழுதிய சமண்முனிவரான பவணந்தியோ இந்நுட்பம் உணராமையின், தமது ‘நன்னூலின்' முகத்துத் தாம் வழிபடு கடவுளாகிய அருகதேவனை வணங்கி வாழ்த்துரைத்தார்; இது குற்றமாதல் கண்டுகொள்க. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார், ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தை நன்கு உணர்ந்த வராகலின் அவரைப் பின் பற்றிய தாம் எச்சமயத்தார்க்கும் பொதுவாக இயற்றிய தெய்வத் 'திருக்குறள்' நூலின்கண் தாம் வழிபடுங் கடவுளுக்கு கடவுளுக்கு வாழ்த்துங் வாழ்த்துங் கூறாமல், எல்லாச் சமயத்தார்க்கும் ஏற்புடைத் தான பொதுநிலையில் வைத்துக் கடவுள்வாழ்த்துக் கூறினார். இப் பேராசிரியர் இருவர் தங் கருத்தை நன்கறிந்தே, தொல்காப்பியத்துக்கு உரைவகுத்த இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலான உரைகாரர் எவருந் தமதுரையில் திருச்சிற்றம்பலக் கோவை யாரின் அகப்பொருட்டுறைகளை எடுத்துக் காட்டிற்றிலரென்க. திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு விழுமிய நல்லுரை வரைந்த பேராசிரியரே, தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் அதன் அகப்பொருட் செய்யுட்களை எடுத்துக் காட்டிற்றிலராயின், பிறர் அவை தம்மை ம எடுத்துக் காட்டாமைக்கு ஏது என்னையென்று வினாதல் வழுவன்றோ வெனக் கூறி மறுக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/267&oldid=1590898" இலிருந்து மீள்விக்கப்பட்டது