பக்கம்:மறைமலையம் 24.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

309

அல்லதூஉம், கும்பகோணத்துக்கு அருகாமையிலுள்ள திருவலஞ்சுழிக் கல்வெட்டொன்றில் மாணிக்கவாசகர் பெயர் காணப்படுகின்றதென் றுரைத்த ராவ் அவர்கள், அக் கல்வெட்டின் காலவளவையும் அதன் வரலாறும் கூறாது விட்டது என்னையோ? திருவலஞ்சுழிக் கல்வெட்டு மிகப் பழையதாதல் பற்றி அதனை விவரித்துரைப்பிற் றமது கொள்கை புரைபடுமெனக் கருதி விட்டார்போலு மென எமக்கு ஐயம் நிகழாநிற்கின்றது அது நிற்க.

L

அல்லதூஉம், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட். சென்னி,சேரலாதன், ஆலங்கானத்திற் போர்வென்ற பாண்டியர் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் என்றற்றொடக்கத்துப் பழைய தமிழ்மன்னர் பெயரும், நக்கீரர், கபிலர், பரணர், மாங்குடி மருதனார் என்றற் றொடக்கத்துத் தமிழ் நல்லிசைப் புலவர் பெயரும் பொறித்த கல்வெட்டுகள் காணப் படாமைபற்றி அவரெல்லாம் பிற்காலத்திருந்தனரென ராவ் அவர்கள் கூறப்பெறுவரோ? பண்டைக்காலத்துத் தண்டமிழ் வளஞ்சிறக்க இலக்கண இலக்கிய நூல்கள் பரக்கக்கற்றும் பலப்பல புதிது புதிதா இயற்றியும் வந்தமையானே, அந் நூல்களால் அம் மன்னர் புலவர் முதலாயினர் பெயர் பதிக்கப்பட்டு இன்றுகாறும் வழங்கி வரலாயின. இலக்கண இலக்கிய நூல் வழக்கின்றி நாகரிகக்குறைவுள்ள காலத்தின் மாத்திரமே மன்னர்கள் தம் பெயரும் தம் கொடைத் திறமும் மறையாதிருத்தற் பொருட்டுக் கல்வெட்டுகள் தோற்றுவிப்பர். யாங் கூறுவதே உண்மைப்பொரு ளென்றற்குத் தமிழ்வளம்மிக்க பண்டைநாட் டமிழ்மன்னர் கல்வெட்டுகள் இதுகாறும் வெளிவராமையே உறுஞ் சான்றாம். மற்று இவ்வாறன்றி, ராசராச சோழன் முதலிய பிற்காலமன்னர் காலத்தே தமிழ்க்கல்விவளஞ் சுருங்கிப்போக, மிலேச்சவரசர் பலர் அலைமேலலை புகுந்தாற்போல இடை டயிடையே படை யெடுத்து வந்து இந்திய மக்களை நலிந்து குழப்பமுண்டாக்கி வந்த காரணத்தானே, பிற்காலத்துத் தமிழ்வேந்தர் தங்கொடைத்திறம் முதலியன தமக்குப் பின்னும் அழியாது புலப்படுதல் வேண்டிக் கற்களிற் ாறித்து நிலை பெறுவித்தார்.பண்டைநாட்டமிழ்மன்னர் காலத்து வேற்றரசர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/318&oldid=1590965" இலிருந்து மீள்விக்கப்பட்டது