பக்கம்:மறைமலையம் 24.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

அவனையேதான்

மறைமலையம் 24

சுவாமிகள் குறிப்பிட்டிருக்கவேண்டு

மென்றும் ராவ் ஊகஞ்செய்கின்றார்.

இப்போது சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படும் சிலா

எட்டாம்

சாசனங்களும் வமிசாவளிகளும் கி.பி. நூற்றாண்டிற்குப் பிற்பட்ட பாண்டிய சோழ அரசர்களையே எடுத்துப் புகலுகின்றன. கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய பாண்டிய சோழ சேர மன்னர்கள் பலப் பலர் உளராகப் பழைய செந்தமிழ் நூல்களால் அறியப்படவும். அவ் வரசர்களைப்பற்றிய சிலாசாசன செப்புப் பட்டயங்களுள் ஒன்றேனும் இப்போது அகப்படக் காண்கிலேம். சிவாலயங்கள் எண்ணிறந்தன கட்டுவித்த சோழன் கோச்செங்கண்ணானைப் பற்றிய சாசனமே அகப்பட்டிலதாயின் மற்றை அரசர்களைப் பற்றிக் கேட்பானேன்? இங்ஙனஞ் சிலாசாசனங்கள் எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே தோன்றியதற்கும் அதற்குமுன் தோன்றாமைக்குங் காரணம் முன்னரே கூறிப்போந்தாம். ஆகவே, பிற்காலத்திய சிலாசாசன ஆராய்ச்சி பண்டைநாட் டமிழ் மன்னர் காலந் தேர்தற்குச் சிறிதும் பயன்படாத தொன்றாமென விடுக்க. எனவே, பிற்காலத்து அரசர் பரம்பரை யினைக் கூறும் சேஷகிரி சாத்திரியார் வமிசாவளிப் பட்டி ஈண்டைக்குச் சிறிதும் பயன்படா தென்றுணர்க குலோத்துங்கச்சோழன், கரிகாற்சோழன் முதலான பெயர்கள்

மன்னர்கள் பலர்க்கிருந்தாவாறுபோல வரகுணபாண்டியன் எனும் பெயரும் மன்னர்கள் பலர்க்கிருந்திருக்கவேண்டும். இதுகாறுங் குறித்துவருங் காரணங்களானும்

காட்டப்படும்

பின்னே

காரணத்தானும் பின்னிருந்த வரகுண பாண்டியனுக்கு மூன்று நூற்றாண்டு முற்பட்டிருந்த அப்பர் சுவாமிகளுக்கும் முற்பட்டவராக மாணிக்கவாசக சுவாமிகளிருத்தலால் அவர்களாற் குறிக்கப்பட்ட வரகுணபாண்டியன் வேறென்பதே துணி பொருளாம்.

இனி, மாணிக்கவாசக சுவாமிகள் புத்தகாலத்தினரா மென்று கூறுவாருரையை மறுத்துச், சைனமதம் புத்தர் காலத்திற்குப் பிந்தியதன் றென்றும், புத்தகாலம் 9ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் நீண்டதென்பதற்குக் கி.பி. 984 முதல் 1012 வரையில் செங்கோலலோச்சிய இராசராசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/333&oldid=1591000" இலிருந்து மீள்விக்கப்பட்டது