பக்கம்:மறைமலையம் 24.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

  • மறைமலையம் - 24

வடக்கே பனிமிகுந்த நாடுகளிலிருந்து வந்தவர்களாதலின் அழகிய வெண்ணிறமுள்ள உடம்பும் நீல விழிகளும் வாய்ந்தவர்களாயிருந்தனர். அவர்களது அழகிய தோற்றத்தைக் கண்ட அஞ்ஞான்றைத் தமிழரிற் பலர், அவ்வாரியர் சொல்லை மெய்யென நம்பி அவர்களைத் தம்மினும் உயர்ந்த தேவர்களாகவே எண்ணிக் கொண்டாடி அவர்க்குப் பணிந்தொழுகலாயினர். இவ்வளவுக்குத் தமிழரைத் தங் கீழ்ப்படுத்த இடம்பெற்ற ஆரியர்க்கு இனி இங்கு ஆகாதது என் உளது! ஆரியர் கடவுளராகவும், அவர் காணர்ந்த ஆரியமொழி கடவுளர் மொழியாகவும், அம்மொழியில் அவர் பாடிய பாட்டுக்கு ‘இருக்கு’ ‘எசுர்’ ‘சாமம்' என்னும் வடிவிற் புருஷமேதத்தில் (ஆண் மகனைக்கொன்று வேட்ட வேள்வியில்) தோன்றியனவாகவும் (இவ்வாறு இருக்குவேத புருடசூத்த மந்திரத்தில் எழுதிவைக்கப்பட் டிருக்கின்றது). பின்னுஞ் சிலகாலங் கழிந்தபின் இவ்வேதங்கள் சிவபிரானாலேயே அருளிச் செய்யப்பட்டனவாகவும் வைத்துத் தமிழர் கொண்டாடும் படி செய்துவிட்டனர்.

இவ்வளவில் அமையாது, ஆரிய மொழி யல்லாத தமிழ் முதலியன மக்களால் ஆக்கப்பட்டன வாகலின் அவற்றின்கண்

வரையப்பட்ட நூல்கள் ஆரியரால் ஏற்கற்பாலன அல்லவெனவும், ஆரியமொழியில் உள்ள நூல்களே தலைமேற்கொண்டு ஏற்றற்குரியன வெனவும், ஆரிய இனத்தவரல்லாத தமிழரும் பிறரும் ஆரியமொழி நூல்களை ஓதுதற் குரிமையுடையரல்ல ரெனவும், தமிழரும்பிறரும் ஆரியர் ஏவிய பணிசெய்து ஒழுகுதல் ஒன்றற்கே உரியரெனவும் மொழிந்து நாட்செல்லச் செல்லத் தமது முதன்மையினை நாட்டுதற்கு வேண்டும் ஏற்பாடுகளை யெல்லாம் ஆரியர் ஒரே கட்டுப்பாடாயிருந்து திறமாய்ச் செய்துகொண்டனர். தமிழரில் வலியராயுள்ள அரசர் களையுஞ் செல்வவாழ்க்கையிற் சிறந்த வணிகர்களையுந் தமது முதன்மை நிலைபெறாதெனக் கண்டு, அரசரையும் வணிகரையும் மட்டுந் தமக்குக் கீழ் ஒருபடி இரண்டுபடி மட்டில்இறக்கி, அவர்களுக்கு, 'க்ஷத்திரியர், வசியர்' என்னும் பெயர்களைச் சிறப்பாகத் தருவதுபோற் றந்து, அவர்கள் மகளிரோடு தாம் கலக்கலாம், ஆனால் அவர்கள் தம் மகளிரொடு கலக்கலாகாதென்றும், அங்ஙனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/97&oldid=1590718" இலிருந்து மீள்விக்கப்பட்டது