பக்கம்:மறைமலையம் 25.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

129

இது பாண்டியன்பொருட்டுப் போரிற் றோன்றிப் பல தோற்றங்களைக் காட்டிய இறைவன் றன்மையைக் கூறியது; இதனை மேற்காட்டிய வரலாறுகளிற் காண்க.

‘பாவகம்' என்னும் வடசொல் அகத்தேயுள்ள எண்ணத்தைப் புறத்தே புலப்படக் காட்டும் நடை' என்று பொருள்படும்.இறைவன்தான்கொண்ட திருவுளக்குறிப்பின்படி யெல்லாம் புறத்தே பல தோற்றங்களைக் காட்டினமையின் இச்சொல்லை எடுத்தாண்டார்.

‘சேவகம்’ வீரம் எனவும் பொருள்படுதலைச் சூடாமணி நிகண்டிற் காண்க.

85

90

கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் ஐயா றதனிற் சைவன் ஆகியும்

துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும் திருப்பனை யூரில் விருப்பன் ஆகியும் கழுமலம் அதனிற் காட்சி கொடுத்தும் கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும் புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் குற்றா லத்துக் குறியாய் இருந்தும்;

கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் - திருக்கடம்பூர் என்னுந் தலத்திற் கோயில் கொண்டிருந்தும், ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் - திருஈங்கோய் மலையில் அழகிய உரு வினைக் காட்டியும், ஐயாறு அதனில் சைவன் ஆகியும் - திருவை யாற்றின் கண்ணே சைவமறையோன் உருவங்கொண்டும், துருத்திதன்னில் கண்ணே சைவமறையோன் உருவங்கொண்டும், துருத்திதன்னில் அருத்தியோடு இருந்தும் - திருத்துருத்தி என்னும் ஊரில் விருப்பத்துடன் இருந்தும், திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் - திருப்பனையூர் என்னுந் தலத்தில் விருப் புடையவனாகியும், கழுமலம் அதனிற் காட்சி கொடுத்தும் சீகாழி என்னுந் தலத்திலே தனது திருவுருவினைக் காட்டியும், கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் திருக்கழுக் குன்றத்தின்கண்ணே மறவாது இருந்தும், புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் - திருப்புறம்பயம் என்னுந் திருப்பதியில்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/162&oldid=1589380" இலிருந்து மீள்விக்கப்பட்டது