பக்கம்:மறைமலையம் 25.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் - 25 ×

விரிசடை மறைத்து மணிமுடி கவித்து

விடைடக கொடி நிறுத்திக் கயற்கொடி எடுத்து

வழுதியாகி முழுதுல களிக்கும்

பேரருள் நாயகன்”

என்று கூறினார்.

இத்திருவாசகச் செழுமறையுள்ளும் ‘தென்னாடுடை சிவன்’ ‘தண்பாண்டிநாட்டான்” “தென்னான்’ 'பாண்டிப் பிரான்’ ‘பாண்டி நன்னாடர்’ என்று அடிகள் இறைவனைப் பலகாலுங் கூறுதல் காண்க.

'பதி' டம் என்னும் பொருட்டாதல் “உறைபதி"

என்பதற்கு (திருக்குறள் 1015) உறைவிடம்’ பரிமேலழகியார் உரை கூறினமையாற் காண்க.

பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்

120 உத்தர கோச மங்கை ஊ ராகவும்

என்று

பத்திசெய் அடியரை - அன்பாற் றன்னை வழிபடும் அடியவரை, பரம்பரத்து உய்ப்பவன் - மிகமேலான நிலையிற் செலுத்துபவன், உத்தரகோசமங்கை ஊராகவும் - உத்தரகோச மங்கையைத் தானிருக்கும் ஊராகக் கொண்டருளியும்

என்றவாறு.

"பரம்" மேலான எனப் பொருள்படுவதொரு வடசொல்; ‘பரம்பரம்' என அஃதிருகால் வந்தமையின் மிக மேலான என்று பாருளுரைக்கப்பட்டது.

ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய தேவ தேவன் றிருப்பெய ராகவும்

ஆதி மூர்த்திகட்கு முதற் றோன்றிய கடவுளர்க்கு, அருள் புரிந்து அருளிய - அருள்செய்த, தேவதேவன் திருப்பெயர் ஆகவும் - மகாதேவன் என்பதே தனக்குரிய அழகிய பெயராகக் கொண்டருளியும் என்றவாறு.

ஆதிமூர்த்திகளாவார் சதாசிவர் அநந்தர் சீகண்டர் குணிருத்திரர் விஷ்ணு பிரமா முதலாயினார். இவர்கள் சுத்தமாயை அசுத்தமாயை பிரகிருதிமாயை முதலியவற்றின்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/177&oldid=1589407" இலிருந்து மீள்விக்கப்பட்டது