பக்கம்:மறைமலையம் 25.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

❖ - 25❖ மறைமலையம் – 25

அற்றேல், உலகமும் உயிர்களும் ஒடுங்கிய அஞ்ஞான்று சிவத்தை அறிவாரும் அதனைப் பயன்படுத்துக் கொள்வாரும் ன்மையின், புலப்படாத மிக நுண்ணிய நிலையிலுள்ள அதனையும் அசத்தெனலே பொருத்தமுடைத் தெனின், அற்றன்று; அஞ்ஞான்று சிற்றறிவுடைய உயிர்களும், அவற்றின் அறிவாகிய பசுஞான பாசஞானங்களுடே அவ்வாறொடுங்கி நிற்குமல்லாது, பேரறிவுடையராய் இறைவன் திருவடியைத் தலைக்கூடி வீடுபேற்றின்பத்தினை நுகரும் உயிர்களும், றைவனுக்கு அணுக்கராய்ப் பதிஞானப் பேறு டைய சதாசிவரும், அவனோடு இரண்டறக்கூடி நிற்கும் அம்மையும் அவனையுணர்ந்து இன்புற்றபடியா யிருப்ப ராகலின் அவர்க்கெல்லாம் அப்பொழுது விளங்கித் தோன்றும் முதல்வனைச் சத்தென்றுரைத்தலே இயைவதாமன்றி அசத் தென்றல் பெரியதொரு குற்றமா மென்க. அற்றேல், வீடு பெற்ற உயிர்களும் சதாசிவரும் அம்மையும் நுண்ணிய நிலையிலுள்ள மாயையையும் உணர்வரென்று உரையாமோவெனின், உரையா மன்றே; என்னை? அவரெல்லாம் இறைவனோடொன்று கூடி நின்று அவன்றன் பேரின்பப் பெருக்கிற்றிளைத்து அவனையே உணருநுராய் இருப்பரல்லது, தம்மிற் பலபடியுந் தாழ்ந்து கீழுள்ள மாயையினை ஒருசிறிதும் நோக்குவா ரல்லரென் றுணர்க. அதனால், மாப்பேரூழியிற் சிவமொன்றே சத்தாய் நிற்குமென்பது பெறப்பட்டது.

இது தெரித்தற் பொருட்டே சுவேதா சுவதரோப நிடதம் "உருத்திரர் ஒருவரே உளர்; இரண்டாவதொன்றைக் கொள்வாரல்லர்” (ஏகோஹிருத்ரோ நத்விதீயாய தஸ்துர்) எனவும்*,(சுவேதாசுவதரம் 3,2) "இருள் உளதாய் பகலிரவுள் இலவாய்ச் சத்தும் அசத்தும் இலவாய் இருந்தபோது சிவன் ஒருவரே தனித்துளர்” (யதாதமஸ்தந்நதிவா நராத்ரிர்ந் நஸந் நசாஸம்ச் சிவஏவ கேவல:) எனவும்* (சுவேதாசுவதரம் 4,18) கூறுவதாயிற்று. இவ்வாற் றாற் ‘சத்தே முதற்கண் இருந்தது’ என்னும் உபநிடதவுரையிற் போந்த சத்தாவது சிவசத்தேயாதல் இனிது பெறப்பட்டமை காண்க காண்க. இங்ஙனமாக உபநிடத வுரைப்பொருள் ஒன்றோ டொன்று முரணாவாறு பகுத்துணர்ந் துரைக்க வறியாது மயங்கி மாயாவாதப்பொருள் கூறல் அவ்வுபநிடதக் கருத்துக்கு முற்றும் மாறாய் வழுப்படுமென்க.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/217&oldid=1589449" இலிருந்து மீள்விக்கப்பட்டது