பக்கம்:மறைமலையம் 25.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

185

எனவே, இறைவன் நிமித்தக் காரணப் பொருளாய் மாயையில் உடன்கலந்து நின்று அதனை இயக்கி அதிலிருந்து இவ்வுலகங் களை யெல்லாந் தோற்றுவிப்பா னென்பது தெற்றென விளங்கா நிற்கும்.

அங்ஙனமாயின், மண்ணிலிருந்து குடத்தை ஆக்குதற்கு நிமித்தகாரணனாயிருக்குங் குயவன் அம்மண்ணின் வேறாய் நிற்பக் காண்டுமன்றி, அதனோடுடன்கலந்துநிற்கக் காண்டில மாலெனின்; முதற்காரணப் பொருளின் வேறாய் நின்றன்றி அதனை ஆக்கமாட்டாத குயவனுக்குள்ள குறைபாடு பற்றி முதல்வனும் அங்ஙனம் நிற்கமாட்டுவான் அல்லலென் றுரைத்தல் பொருந்தாது; இறைவன் முதற்காரணத்தும் அதன் காரியத்துமெல்லாம் எள்ளில் எண்ணெய் போன்றும் பாலில் நெய் போன்றும் உடன்கலந்துநிற்கும் நுண்ணியனாகலின் அவனுக்குக் குயவனை முற்றுவமையாக வெடுத்தல் அவ்வப் பொருளினியல்பறியாக் குறையாய் முடியும் என்பது. அற்றேல், நிமித்தக் காரணப்பொருள் முதற்காரணப் பொருளோடு ஒருங்கியைந்து நின்று காரியங்களைத் தோற்றுவித்தல் உலகின்கட் கண்டிலமா லெனின்; அறியாது வினாயினாய்; சிலந்தி என்னும் உடம்பில் நிற்கும் உயர் அவ்வுடம்போடு ஒற்றித்து நின்று அதிலிருந்து நூலைத் தோற்றுவித்தல் நாடெமாறுங் கண்கூடாய் நிகழக் காண்டமாகலின் நிமித்த காரணம் முதற்காரணத்திற் கலந்து நின்று இயக்கக் கண்டில மென்றல் அமையாது. சிலந்தி யுடம்பு மாயையாகவும், அவ்வுடம்பிற் கலந்து காணப்படும் உயிர் மாயையிற் கலந்து நிற்கும் முதல்வனாகவும், சிலந்தி யுடம்பிற் றோன்றும் நூல் மாயையிற்றோன்றும் உலகமாகவும் உவமையும் பொருளும் இயையுமாற்றைப் பகுத்தறிந்துகொள்க.

இறைவன்

மாயை யிலிருந்து

உலகங்களைத் தோற்றுவிக்கும்முறை முண்டகோப நிடதத்தில் “சிலந்திப்பூச்சி நூலைத் தோற்றுவித்து இழுத்துக் கொள்ளுமாறு போலவும், நிலத்திலிருந்து புற் பூண்டுகள் வெளிப்படுமாறு போலவும், ஓர் ஆண் மகனிடத்திலிருந்து மயிர் முளைக்குமாறு போலவும் அழிவில்லா இறைவனிலிருந்து இவ்வுலகந் தோன்றுகின்றது என்று இங்ஙனமே கூறப்படுதல் காண்க*.(முண்டகோபநிடதம் இவ்வாறாகலின் நிமித்தகாரணனான முதல்வன் முதற்

17)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/218&oldid=1589450" இலிருந்து மீள்விக்கப்பட்டது