பக்கம்:மறைமலையம் 25.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

211

யாராய்ச்சியை மேற்கொள்ளா நிற்கின்றது. அதனையடுத்த இரண்டாஞ் சூத்திரம் நல்வினை யாவன வேதங்கள் செய்க வென்று ஏவும் வினைகளே யாம் எனக்கூறும். நல்வினை என்பது கண்முதலான பொறிகளுக்குப் புலனாகாத தொன்றாகை யானும், ஆகவே ஐம்பொறிகளின் வழியாகவன்றி அறிய மாட்டாத கருதலள வைக்கும் அஃது அறியப்படுபொருளாதல் செல்லாமையானும் வேதம் ஒன்றானே மட்டும் நல்வினையாவ தின்னதென்றுணரற் பாற்றென்பர்.

அற்றேல், வேதங்களுஞ் சொற்களானன்றிப் பொருளை அறிவுறுத்தாமை யானும், சொற்குப் பொருடெரியி னன்றி அதன் பொருளையுணர்தல் ஏலாமையானும், ஆ முதலான ருள்கள் உலகின்கண் கண்மை உணரப்படினன்றி ஆ முதலான சொற்களின் பொருள் அறியப்படாமையானும், இப்பொருட்கு இச்சொல் என்னுந் தொடர்பு உலகின்கண் மக்களால் நிறுத்தப்பட்ட வழக்கா னன்றித் துணியப்படாமை யானும், அதுபோல் ‘நல்வினை' என்பதும் உலக வழக்கின்கண் வைத்து உணர்தல் ஆகாமை யானும் வேதமொழியைக் கொண்டும் அதனை யறிதல் செல்லாது என உரைப்பாரை மீமாஞ்சகர் மறுக்குமாறு: சொற்கும் அதன் பொருட்கும் உளதாகிய தொடர்பு மக்களால் நிறுத்தப்பட்டதன்று; அஃது இயற்கையே என்றும் உளதாவ தாம்; அஃது அவரால் நிறுத்தப் படாததாகவே அது பிழைபடு மாறுமில்லை. ஆதலால் வேத மொழியைக் கொண்டே நல் வினை யின்னதென்று உணரற் பாற்று.வேதங்களில் ஏவற் பொருண்மேல்வருஞ் சொற்றொடர் களிற் பெறப்படும் பொருள்கள் பிழைபடுதல் ஒரு காலத்துங் காணப்படாமையின், அவற்றின் உண்மைத்தன்மை என்றுங் களங்கமுறாதென்க.

இனிச், சொல் என்றுமுள்ள தென்றல் யாங்ஙனம்? அஃது ஒருவனது முயற்சியால் முற்பொழுதிற்றோன்றிப் பிற்பொழுதில் அழியக்காண்டு மென நையாயிகர் உரைப்பர். அதுவேயுமன்றி, ‘அவன் குடத்தை உண்டாக்கினான்' என்று வழங்குமாறு போலவே, அவன் சொல்லை உண்டாக்கினான் என்றும் வழங்குகின்றாராகலின், சொல் ஒருவரால் ஆக்கப்படுதலும்; ஒரு சொல்லே ஒரே நேரத்திற் பலராற் பல இடங்களிற் பேசப் படுதலும் அங்ஙனமே அங்ஙனமே கேட்கப்படுதலும் உண்மையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/244&oldid=1589478" இலிருந்து மீள்விக்கப்பட்டது