பக்கம்:மறைமலையம் 25.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் 25

110 நிற்பன நிறீஇச் சொற்பதங் கடந்த தொல்லோன்

-

உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன், கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன். விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்.

115 பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன்றெனக் கெளிவந் தருளி

அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள், இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி,

120 அனிதரும் ஆக்கை செய்தோன் போற்றி, ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி, ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்;

-

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி - நஞ்சினையுடைய பாம்பை ஆட்டிய நம்பெருமானுக்கு வணக்கம், பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி - (என்பதை எமைப் பிச்சு ஏற்றிய பெரியோன் போற்றி என மாற்றி) எமக்கு மயக்கத்தினை ஏறச் செய்த பெரியவனுக்கு வணக்கம் எனப் பொருளுரைக்க, நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி - திருநீற்றோடு வடிவு தோற்ற வல்லவனுக்கு வணக்கம், நால்திசை நடப்பன நடாஅய் - நான்கு திக்கினுள்ளும் நடப்பனவற்றை நடக்கச்செய்து,கிடப்பன கிடாஅய் கிடப்பனவற்றைக் கிடக்கச் செய்து, நிற்பன நிறீஇ நிற்பனவற்றை நிற்கச் செய்து, சொல்பதம் கடந்த தொல்லோன் இங்ஙனமெல்லாம் எல்லாவற்றையும் இயக்கினும் தான் சொல்லின் தரத்தையுங் கடந்த பழையவன், உள்ளத்து உணர்ச்சி யில் கொள்ளவும் படாஅன் - மனத்தினது உணர்வினாற் பற்றவும் படாதவன், கண்முதற்புலனால் காட்சியும் இல்லோன் முதலாய பொறியுணர்வினாற் காணப்படுதலும் இல்லாதவன், விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன் - வான் முதலான ஐம்பெரும் பொருள்களும் உண்டாகுமாறு படைத்தவன்,பூவின் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் ஒழிவு அற நிறைந்து மேவிய பெருமை இன்று எனக்கு எளிவந்து அருளி அழி தரும் ஆக்கை

-

கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/281&oldid=1589521" இலிருந்து மீள்விக்கப்பட்டது