பக்கம்:மறைமலையம் 25.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

  • மறைமலையம் - 25

திருமால் ஈரடியால் மூவுலகளந்த வரலாறு வான்மீகி இராமாயணத்திற் கூறப்பட்டது; அது வருமாறு: "விசுவா மித்திரர் இராமனை நோக்கிச் சொல்லுகிறார்: 'தடந்தோளி னையுடைய இராம, பெருந் தவத்தினரும் தேவர்களாற் றொழப் படுவோருமான விஷ்ணு பெருந்தவம் புரிந்து உள்ளத்தை ஒருக்குதற் பொருட்டு இவ்விடத்தில் உறைந்தனர். இராமனே இது பெரியோனான வாமன முனிவனது துறவாசிரமமாகும்; இதன்கண் அப்பெருந் தவத்தோன் தாம் விரும்பிய பேற்றை அடைந்தமையான இது சித்தாசிரமம் எனப் பெயர் பெற

லாயிற்று.

முன்னொருகால், விரோசனன் மகனான பலி என்பவன் தேவர்கட்குத் தலைவனான இந்திரனை வன்ற பின் மூவுலகங்களையும் அரசாளும் உரிமை பெற்றுத் தன் ஆற்றலின் பெருக்கால் மயங்கினான்: அதன்பிற் பலி ஒரு பெருவேள்வி யாற்றியபோது இந்திரனும் மற்றைத் தேவர்களும் அச்சமுற்று இத்துறவாசிரமத்தில் உறைந்த விஷ்ணுவை நோக்கி இவ்வாறு கூறினார்: ஓ விஷ்ணுவே, விரோசனன் மகனான வலிய பலி என்பவன் இப்போது வேள்வி ஆற்றுகின்றான்; அசுரர்களுக்குத் தலைவனாய்ச் செழித்தோங்கும் அவன் எல்லாரும் வேண்டியன வெல்லாம் வேண்டியபடி கொடுக்கின்றான். எந்தத் திக்கிலிருந்து வரும் இரவலரும் எவ்வெவற்றை விரும்பிக் கேட்டாலும் அவ்வற்றை யெல்லாந் தக்கவாறாய் அவர்கட்கு வழங்குகின்றான். ஓ விஷ்ணுவே, நீரும் தேவர்கள் நன்மையின் பொருட்டு மாயமாய் ஒரு குறுகிய வடிவெடுத்து எங்கட்குப் பெரியதொரு நன்மையை விளைத்தல் வேண்டும்' ஓ இராமா, இதே பொழுதில் தீயைப் போல் விளங்குபவரும் பேரொளியால் திகழ்பவருமான காசியபர் தேவ ஆண்டில் ஆயிரம் ஆண்டுகள் ஓர் அருந்தவம் இயற்றி முடித்து அதிதியுடன் போந்து வரந்தரும் மதுசூதன னுடை புகழ்களை எடுத்தோதுவாரானார்; தவத்தின் சார மாயும், தவத்தின் தொகுதியாயும், தவத்தின் உருவாயும் தவத்தின் செல்வமாயும் உள்ள புருடரிற் சிறந்தோனே, நின்னை யான் தவத்தின் மிகுதியாற் காணப் பெறுகின்றேன்.

பெருமானே, நினதுடம்பினிடத்தே இவ்வுலகம் முழுதுங் காண்கின்றேன்; நீர் தொடக்கம் இல்லாதீர்; சொல்லுக்கு அடங்காதீர்; உம்மை யான் அடைக்கலமாகப் புகுந்தேன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/313&oldid=1589560" இலிருந்து மீள்விக்கப்பட்டது