பக்கம்:மறைமலையம் 25.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

պ

திருவாசக விரிவுரை

283

யுடையோனும், காலத்தை மையமாக உடையோனும், வெண்மையுங் கருமையும் உடையோனும், முக்குணங்களிற் றீர்ந்தோனும், எல்லாவற்றினுயிராய்ச் சத்து அசத்துக்களின் மயனாய் உள்ளோனும் நடந்தோளினனும் ஆன நாராயணன் தவ நினைவில் ஆழ்ந்த உள்ளத்தினனாய் நீர்மேற் றுயின்றான். தாமரைக் கண்ணனாகிய அக்கடவுள் இங்ஙனந் துயிலும் நிலைமையிலுள்ளதைக் கண்ட அவனது மாயத்தால் மயக்கப் பட்டேனாய், அவனை என் கையாற் றொட்டு ‘நீ யார்? சொல்’ என்று விரைந்து கேட்டேன். எனது கையால் வல்லென்று கடுமையாகத் தட்டப்படுதலும் தனது பாம்பணையினின்றும் எழுந்து, அடக்கமுடன் சிறிதமர்ந்து, தாமரை மலர்போற் றூய கண்களையுடை அத்தேவன் தூக்க மயக்கத்தோடும் என்னை நிமிர்ந்து நோக்கினன். ஒளியாற் சூழப்பட்ட பகவானான அரி, யான் தன்னெதிரில் நிற்பதைக் காண்டலும் எழுந்து இ னிது முறுவலித்துக் கொண்டே நின்வருகை நன்றாகுக, நின்வருகை நன்றாகுக, என் மகவாகிய சிறந்த பிதாமகனே என்று என்னை நோக்கி மொழிந்தனர்.

நகையோடு அவர் மொழிந்த இச் சொற்களைக் கேட்டு, ஓ தேவர்களே, எனக்கு இராசதத்தால் எரிச்சல் உண்டாகவே யான் சநார்த்தனனை நோக்கி ஓ பாவமற்ற தேவனே, படைப்பிற்குங் காப்பிற்குங் காரணனாயும், எல்லா வுலகங்களையுந் தோற்று விப்போனாயும், பிரகிருதியை இயக்குவோனாயும் என்றும் உள்ள பிறவாத விஷ்ணுவாயும், தாமரைக் கண்ணனாயும், எல்லாவற்றையும் படைத்துக் காத்து அவற்றின் உயிராயும் உள்ள என்னை ஓர் ஆசிரியன் தன் மாணாக்கனை நோக்கிப் பேசுமாறு போல உள்ளே நகைத்துக் கொண்டு ‘மகவே மகவே’ என்று அழைக்கின்றனையா? நீ ஏன் என்னை அவ்வளவு மடமையோடும் அங்ஙனம் அழைக்கின்றனை? விரைவிற் சொல் என்று கூறினேன். அதற்கவர் ‘யானே உலகங்களைப் படைத்துக் காத்து அழிப்பவன் என்று தெரி; அழிவில்லாத த என் உடம்பினின்றும் நீ பிறந்தாய். உலகிற்குத் தலைவனும், வலிமை மிக்க நாராயணனும், புருடனும், பலரால் வழுத்தப்பட்டுப் பலராற் புகழப்படும் பரமான்மாவும் விஷ்ணுவும் அழிவில்லாத வனும், தலைவனும் உலகிற்குப் பிறப்பிடமும் வாயிலும் ஆவோனும் ஆகிய என்னை நீ மறந்திருக்கின்றனை. இதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/316&oldid=1589567" இலிருந்து மீள்விக்கப்பட்டது