பக்கம்:மறைமலையம் 25.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

மறைமலையம்

25

அவை ஏவுவன செய்தலும் விலக்குவன வொழிதலும் உறுதிப் பயன்றரு மெனவும் வலியுறுத்திச் சொல்லித், தாஞ் சொல்வன வற்றிற்குத் தம் வேத நூல்களையுஞ் சான்றாகக் கொணர்ந்து காட்டிஅக்கடவுள் நினைவைக் கலைத்தற்கு மடிகட்டிநிற்றலின் 'விரதமே பரமாக வேதியருஞ், சரதமாகவே சாத்திரங் காட்டினர்' என்றருளிச் செய்தார்.

பழைய ஆரிய வேத நூல்களில் முழுமுதற் கடவுள் இருப்பும் இலக்கணமுந் ‘தெற் றென விளக்கப் படாமை யானும், அவ் வேதநூல்களைப் பன்னெடுங் காலம் ஓதியுணர்வா ரெல்லாம் தம்மையுந் தம்மோ டொத்த மக்களையுமே கடவுளாகத் துணிந்து அவ்வழியில் ஒழுகுதலானும், வேள்வி யாற்றுதல் முதலாகிய வினைகளையே அவர் இஞ்ஞான்றுஞ் சிறந்தெடுத்துப் பேசுதலுஞ் செய்தலுங் கைக்கொண்டு வருதலானும், முழுமுதற் கடவுளாகிய சிவம் என்பதன் பெயரைக் கேட்பினும் அவர் அருவருப்புதலானும் ஆரியவேத மோதும் வேதியர் முமுமுதற் கடவு ணினைவுக்கு மாறாய் நிற்பவரென்பது ஐயுறவின்றித் துணியப்படும்.

‘வ்ரதம்’ என்னும் வடசொல் தமிழில் ‘விரதம்' எனத் திரிந்தது; விரதமானது வேள்வியாற்றுதல் முதலாகிய நோன்பு. 'பரம்' என்னும் வடசொல் கடவுளை உணர்த்தும்.

வேதியர் - வேதம் ஓதுவோர், வேதம் உணர்ந்தோர்.

சாதம் க

-

மெய்ம்மை; இச்சொல் இப்பொருட்டாதல் “சரதம் உடையர்” என்பதற்குப்* (திருச்சிற்றம்பலக் கோவையார் 57) பேராசிரியர் கூறிய வுரையிற் காண்க.

நூல்

எனப் பொருள்படும் சாஸ்திரம்' என்னும் வடசொல் ‘சாத்திரம்' எனத் திரிந்தது.

மேலே ‘திருவண்டப் பகுதியில்’ “அறுவகை சமையத்தறு வகையோர்” கோட்பாடுகளை விரித்துரைத்த உரைப்பகுதி களாற் சைவமல்லாத ஏனைச் சமயத்தவர்களெல்லாம் முழுமுதற் கடவுளை யறியாதவ ரென்பதூஉம் அவர் உலகத்துப் பொருள் களொரேராவொன்றனையும், மக்களுள் அறிவானும் ஆற்றலா னுஞ் சிறந்தோர் ஒரோ வொருவரையுந் தெய்வங்களாகத் திரியவுணரு நீர ரென்பதூஉங் காட்டினாமாகலின், அவர் தாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/343&oldid=1589701" இலிருந்து மீள்விக்கப்பட்டது