பக்கம்:மறைமலையம் 25.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

மறைமலையம் - 25

அளிப்பவர்' அன்பால் உருகுபவர். அளி அன்பு; திவாகரம். இனிக் கனிந்த பழத்தை அளிந்த பழம் என்று வழங்கு பவாகலின், அன்பாற் கனிபவரெனப் பொருளுரைப்பினுமாம்; “அளிந்த தீம் பழம் இஞ்சி யார்ந்த நீர்" என்றார் சீவக சிந்தாமணியுள்ளும்*. (சீவகசிந்தாமணி 13 84) அறிந்த பழத்திற் றேன் ஊறுமாபோல் அன்பாற் கனிந்தவ ருள்ளத்தும் இறைவன் இன்பவூறலா யிருப்பனென்பது பெறப்பட்டது.

145 இடைமரு துறையும் எந்தாய் போற்றி சடையிடைச் கங்கை தரித்தாய் போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி

150

அண்ணா மலைஎம் அண்ணா போற்றி

கண்ணார் அமுதக் கடவே போற்றி ஏகம் பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி பாராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

155 மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி குற்றா லத்தெங் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலைஎம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி

160 கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

இடைமருது உறையும் எந்தாய் போற்றி - திருவிடை மருதூரில் உறைந்தருளும் எம் தலைவனே போற்றி, சடை அடைக் கங்கை தரித்தாய் போற்றி - சடையினிடத்துக் கங்கை நீரினைத் தாங்கினவனே போற்றி, ஆரூர் அமர்ந்த அரசே போற்றி - திருவாரூரின்கண் விரும்பி யிருந்த அரசனே போற்றி, சீர் ஆர் திரு ஐயாறா போற்றி - அழகு நிறைந்த திருவையாற்றை யுடையவனே போற்றி, அண்ணாமலை எம் அண்ணா போற்றி - திருவண்ணாமலையில் எழுந்தருளி யிருக்கும் எம் அண்ணலே கண் நிறைந்த போற்றி, கண் ஆர் அமுதக் கடலே போற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/377&oldid=1589865" இலிருந்து மீள்விக்கப்பட்டது