பக்கம்:மறைமலையம் 25.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

-

  • மறைமலையம் - 25

'நிர்மலன்' என்பதில் ‘நிர்’ என்னும் வடமொழி எதிர்மறை டைச்சொல் ஈறு கெட்டு ‘நி' என நின்று 'மலம்' என்னுந் தமிழ்ச் சொல்லோடு புணர்ந்து வரலாயிற்று.

தலைவன், கணவன் எனப் பொருள்படும் 'பர்த்ரு' என்னும் வடசொல் ‘பத்தா’ எனத் திரிந்தது.

சிவபெருமான் எவற்றையுந் தோற்றுவித்தலிற் ‘பவன்’ எனவும், எவற்றையும் அழித்தலிற் ‘சர்வன்' எனவும் ஆரிய வேதங்களும் கூறப்படுவன். எசுர்வேதத்திடையில் உள்ள சத் ருத்ரீயத்தில் “நமோ பவாய ருத்ராயச நம : சர்வாயச பகபதயேச நமோ நீலக்ரீவாயச் சிதிகண்டாயச" எனப் போந்தமை காண்க.

எப்பொருட்கும் இறைவனாவான் ‘பிரான்' எனப்படும் என்று திவாகரம் கூறும்.

அமலா' என்பதில் அகரம் எதிர்மறைப் பொருளை யுணர்த்தும் ஒரு வடமொழி இடைச்சொல்.

கோலம் - வேடம்; இச்சொல் இப்பொருட்டாதல் “உள் வரிக் கோலந் துறுதுணை தேடி” என்னுஞ் சிலப்பதிகார அடிக்கு (சிலப்பதிகாரம் இந்திர விழா வூரெடுத்த காதை அரும்பதவுரைகாரர் கூறிய வுரையிற் காண்க.

6

216)

நெறி - பீதி; பிங்கலந்தை. இறைவன் தமக்கு ஆசிரிய வடிவிற் றோன்றிய ஞான்று ஒரு மறையவன் போல் எழுந்தருளின னாகலின் ‘மறையோர் கோலம்' என்றும், எல்லா வுயிர்கட்கும் அவன் நடுநின்று அருள்புரிதலின் அவனை ‘நெறி' என்றுங் கூறினார்.

66

‘முறை” நீதியினை யுணர்த்தல் “முறை வேண்டு பொழுதிற் பதினெளியோர்” என்பதன் (புறநானூறு 35) உரையிற் காண்க.

ஆசிரியனாய் எழுந்தருள் செய்த முதல்வனைத் தாம் பிரிந்திருக்கலாற்றாமையின் ‘முறையோ தரியேன்' என்றார்.

சிறவு - சிறப்பு; இஃது அருகிய வழக்கு.

மஞ்சு - மழை மேகம்; திவாகரம்; அடியார்க்கு வேண்டுவன வெல்லாங் கேளாதே வழங்கலின் இறைவனை ‘மஞ்சு' என்றார். இதனை வடசொல்லெனக் கொண்டு 'அழகன்' எனப் பொரு வ ளுரைப்பாரும் உளர். 'மஞ்சு' முகிலை உணர்த்துங்கால் தமிழ்ச் சொல்; அழகை உணர்த்துங்கால் வடசொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/385&oldid=1589902" இலிருந்து மீள்விக்கப்பட்டது