பக்கம்:மறைமலையம் 26.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

77

பிரமமொன்றே மெய்யென்னு மிவரதுமத மழியாது நிலை பெறுவதெங்கே? எந்த வேதாந்த சாஸ்திரத்தில் கடல் பொய் - நீர் மெய்யென்று எழுதப்பட்டிருக்கின்றது, இவர் காட்டிய வேதாந்த (மாயாவாத) சாஸ்திரங்களில் கடலினி டத்தில் அலைகுமிழிகடோன்றி யடங்குவதுபோலப் பிரமத்தினிடத்தில் ஜீவஜகங்கடோன்றி யடங்குகின்றன வென்று கூறுஞ் சத்தியத் தைச் சத்தப் பிரகரணம்படித்த சிறுபையனும் அறிவானே. பிரமம் கடலும், ஜீவஜகங்கள் நீருவர்களுமாகக் கூறியிருக்கும் நிலைகளை யிவரறியாமை யாலன்றோ கடல் பொய்யென்று கூறிப் பிரமத்தைத் தெருவில் விட்டுக் கண் சாம்பினார். இவ்வாறு எதிரியினது சஸ்திரம் வந்து தமது கண்ணைக்குத்து மென்று இவரறியாமையால் தம்மினத்துப் பாலிசர் மகிழச் சில பலவெழுதித் தொலைத்தார். இதுகாறும் யாம் பரமார்த்த விவகார மெய்பொய்களை பிரஸ்தாபித்தது பூர்வ பட்சியினது மதாநுசாரமாகவேயாம். எம்முடைய சித்தாந்த ரீதியாக விவகார பரமார்த்தங்களுக்கு நூனாதிக்யங் கூறுவதன்றிப் பொய்மெய் யென்னும் பிரசங்கஞ் செய்திடர்ப்ப டேமென்க.

- -

இனிக் கடல் நீர் உவர் என்பவைகளில் கடல் அபாவப் பொருளன்றென்பதையும். அவ்வுபமானத்தாற் பெறப்படு முபமேயமாகிய சிவம் அபாவ வஸ்துமாகா தென்பதையு மினித் தெரிவிப்பாம். மேலே யாம் வியாபகம் மேலிடு நிறைவெனவும், அது நீரையாதரிக்கும் நிலைக்களமான இடம் எனவும், அந்த ம் இடந்தானே கடலென்னும் பேர்பெற்ற தெனவும் விரித்திருக் கின்றோம். இந்த இடமில் லாதபோது நீர் நிற்பதெங்கே? நீருக்கு இடங்காட்டாது அந்த நீரையே முக்கியப் பொருளாக நிறுத்திய விவருக்கு நீர் இல் பொருளாக வன்றோ முடியும்? கடலை இல்பொருளென்று கூறிய இவருக்கு நீரும் இல்பொருளாய் முடிந்தமையால், இவரது முடிவு பிரமத்தையும் ஜீவனையும் பெரும்பாழ்கள் என்று கொண்டதாக ஏற்பட்டது. குளம் வெட்டினேன் கிணறு எடுத்தேன் - ஏரியுண்டாக்கினேன் என்று உலகினர் வழங்குவது எவைகளை? குளத்தில் நீரில்லை ஏரியில் ஜலமில்லை-ஏரிவற்றியது பாழ்த்த கிணறு என்பன வாதி பிரயோகங்களையும் “அற்ற குளத்திலறு நீர்ப்பறவை போல்” என்னு மான்றோர் வாக்கியத்தையும் இவரறியாது

-

6

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/110&oldid=1590151" இலிருந்து மீள்விக்கப்பட்டது