பக்கம்:மறைமலையம் 26.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் - 26

சித்தாகிய சிவம் மலினசித்தாகிய ஜீவனாதலும், கேவலம் ஜடமாகிய உலகமாதலும் யாங்ஙனமென்று கடாயினார்க்கு இவர் இரண்டுவித சமாதானங் கூறியிருக்கின்றார். அவற்றுள் விஜாதியான இரண்டு பொருள்கள் ஒன்றிலொன்று பிறக்கு மென்பதொன்றும், “பிரமம் எல்லாமாய் விரிந்த தென்னின் பொருளாய் விரிந்ததென்பது அத்வைதிகளுடைய ய சித்தாந்தமன்று. கயிறு அரவாயிற்று. கானல் நீராயிற்று. இந்திர ஜாலசத்தி பலபொருளாயிற்று. மனம் சொப்பன வுலகாயிற்று என்பதில் கயிறு முதலியன அரவு முதலிய வாதல் தோற்றமேயன்றிப் பொருளல்ல. இது தான் அத்வைதிகளுடைய சித்தாந்தம்” என்று செருக்கு மீதூரத் தருக்கிய தொன்றுமாம். இந்தச் சமாதானங்களில் முதற்சமா தானத்தை மொட்டையடித்துக் கரும்புள்ளி செம்புள்ளிகுத்தி முன்னமே தானே விநோதக்காட்சி மந்திரத்தில் வேடிக்கை பார்க்க வைத்து விட்டோம். ஈங்கு இனி அவரது இரண்டாவது சமாதானத்துக்குஞ் செய்வன திருந்தச் செய்து ஒழுங்கு செய்வாமென்க.

இவர் பிரமம்பரிபூரணம் என்பதற்கு அது பொருளாய் விரிந்ததின்றெனவும், தோற்ற மாத்திரமாய் விளங்குகின்றது எனவும் பொருள் கொண்டதாகத் தெரிகின்றது. விஜாதியான பொருள்கள் ஒன்றிலொன்று பிறக்குமென்று இவர் முதற் கூறிய சமாதானத்தில் பரிபூரணம் பொருளாகவே விரிந்தது என்றேற் படுகின்றது. இவ்விரண்டும் ஒன்றையொன்று உதைத்துத் தள்ளுகிறதோடு, முந்தியதை யாம் முகங்கவிழச் செய்தது யாவருமறிவார்கள். இந்த இரண்டாவது சமா தானத்தில் பரிபூரணம் தோற்றமென்று இவர் கூறியதும் அசங்கதமேயாம். யாங்ஙனமெனின், இவர் தோற்ற ஸமாதானங்கூறியது எப்போது? நிர்மலசேதனமாகிய பிரமம் மலினசேதனமாகிய ஜீவனாகவும், ஜடப் பிரபஞ்சமாகவும் விரிந்தவாறு யாங்ஙன மென்று யாம் கடாவியபோதே யன்றோ? பிரமம் பொருளாய் (விஜாதிப் பொருள்களாய்) விரிந்ததென்பதிலுண்ட ாகிய தோஷமே வெறுந்தோற்றத் திலும் சம்பவித்திருப்பதை யிவருக்கிப் போது காட்டுகிறோம். பிரமம் நிர்மலமான ஒரு தன்மையுடையது. அதில் அதற்கு விஜாதியான மலினசேதனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/123&oldid=1590164" இலிருந்து மீள்விக்கப்பட்டது