பக்கம்:மறைமலையம் 26.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

95

கூறினர் அகஸ்த்யாதி முனிவர்கள்? இவரெவ்வித ஜாலவித்தை செய்தாலுங் கண்ணொளியுடையார் கலங்காரென்க. நிற்க.

66

.

காயமுங்காலும்போல வசைவற்ற-தேகாண் பரி பூரணம்” என்ற திருவாக்கும் சிவ ஜீவர்களது பரிபூரணத்தை வெளிப்படுத்துகின்றது. ஆகாயம் பொருள், வாயுவும் பொருள். இரண்டு முதல்களுந் தம்மிற்கலந்து பொருள் கெடாமல் வர்த்திக்குந் தன்மையுணர்ந்தோர் சிவபூரணத் திலடங்கி வர்த்திக்கும் ஆன்மாவினது நித்தியவியாகபத் தன்மையில் ஓராசங்கையுங் கொள்ளாரென்க. ஆகாயமும் வாயுவும் விஜாதிகளென்பதும், ஆகாயத்தில் வாயு பிறந்ததின் றென்பதும், ஆகாயத்தில் வாயுவானது (கயிற்றிலரவுபோல) தோற்றமாகா தென்பதுமாகிய வுண்மைகளை மேலேயாம். இனிது பரிஷ் கரித்து எதிரிமதத்தை யீடழியச் செய்தோ மாகையால், பூர்வபட்சியினது புண்பட்ட சொல்லுக்கு இனிக் கௌரவ முண்டாகாதென்க. இவ்வருமைகளை அஹங்காரா வேச மின்றிப் பார்த்து மகிழாமல் பொருளில் பொருளடங்குமா வென்று பயனில் கேள்வி கேட்டுத் தனது விபரீதங்களை யெல்லாம் உபமானங்களாக்கி, அவற்றைத் தானேயாட் சேபித்துக் கொண்டு இவரிது காறும் மனப்பால் குடித்ததும், அதற்குமேல் விவர்த்வாதாநுசாரமான பரிபூரணம் நிராட் சேபமானது என்று வீண்தருக்கம் பேசியதும் இனியென் னாமோ வறியேம். இவரது தத்துவநிச்சயம் புருடர் மெச்சுந் தன்மையின தாகாமையை இன்னுங் கொஞ்சம் - விரிப்பாம். இவர் கொஞ்சம் மானியம் விட்டு வைதிகரென மெச்சிய ஸ்ரீகண்டமூர்த்திகள் சிவபரிபூரணத்தைப் பொருளாகக் கொண்டனரா? தோற்றமாகக் கொண்டனரா? ஏனைய இராமாநுஜர் முதலினோர் எவ்வாறு கொண்டார்கள்? இவர்களையும். சித்தாந்த சைவர்களைப் போலக் கேவலம் நிமித்தவாதங் கூறும் மத்துவ மதத்தவரையும் இந்த அவிவேக புஞ்சம் தெரியாதவர்களாக்கித் தனது சங்கரா சாரியருங் கண்டு கூறாத தோற்றப் பரிணாமம் தோற்றப் பரிபூரண முதலிய ஆபாசங்களையெழுதிப்பரப்பி அஹங்காரமஹோத்ஸவங் கொண்டாடித்திரிவது காலத்தின் கொடுமையேயாம். சுருதிகள் சிவபரமாத்மாவை “விசுவாதிகன்-விசுவககாரணன் -விசுவாந் தரியாமி-விசுவரூபி" என்று கூறுமுண்மைகளுக்கு இந்தக்கண்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/128&oldid=1590169" இலிருந்து மீள்விக்கப்பட்டது