பக்கம்:மறைமலையம் 26.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரண் ாவது

  • வேதாந்த மதவிசாரம்

கண்ணாடியினொளிபோல்

105

உள்ளவை;

மூன்றாவது காகிதவொளி போல் உள்ளவை; வாளி போல் உள்ளவை; நான்காவது ஏனைய கண்ணிலோ, ஜலபிண்டமும் (Aqueous Humour) ஸ்படிகபிண்டமும் (Lens) நுங்குவெள்ளி போன்ற ஓரு பிண்டமும் (Vitrens Humour) ஒன்றன்பின் ஒன்றன்பின் ஒன்றாய் இருக்கின்றன. இவை இல்லாதகண்கள் முழுக்குருட்டு மூழைகளே. இவை ஒவ்வொன்றும் இரண்டாம்வகை யொளிப் பொருள்கள். ஆதலால் கண்ணுக்கொளியில்லை யென்பவரைக் கற்றறியாப் பேதை அறிவிலி அற்பபுத்தி என்று சொல்ல இட ங் கொடுக்கிறது. நிற்க.

66

இந்து” அவர்கள் வைதிகர்தாமோ? அங்ஙனமாயின், ஐதரேயோபநிடதத்தில், “கண்களினின்றும் ஒளியுண்டாயிற்று, அவ்வொளியினின்றும் ஆதித்யனுண்டாயினான்" என்று சொல்லியிருப்பதற்கு என்செய்வார்? அது போலவே புருஷ ஸூக்தத்திலும், கடோபநிஷத்திலும் கண்ணினது ஒளியைப் பிரஸ்தாபித்திருப்பதற்கு என்செய்வார்?

"இந்து" அவர்கள் பெரியவர்களிடம் மதிப்பும், மரியாதையும் உள்ளவர்தாமோ? பொய்யாமொழிப் புலவர் என்று எல்லா மதத்தவராலும் நன்குமதிக்கப் பெற்ற திரு வள்ளுவ நாயனார் “சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந் தின், வகை தெரிவான் கட்டே உலகு” என்று கண்ணின் குணத்தை ஒளியென்றாரே! இதற்கு எங்குப் போய் முட்டிக் கொள்ளுகிறது? எமது மதத்தவர் என்று மாயாவாதிகள் சண்டையிட்டுச் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிற தாயுமானவர் 'வெளியான நீ என் மனவெளியூடு விரவினையால்’, ஒளியாரும் கண்ணும் இரவியும் போனின் றுலாவுவன்காண்' என்று பச்சையாய்க் கண்ணொளி கதிரொளி உதாரணஞ் சொல் வதற்கு என்ன வழிதேடுவது? “ஒளியிழந்த கண்ணே போல்" என்று கம்பன் சொல்வதற்கு யாதுகதி? இப்படி இன்னும் அநந்தமானபேர் சொல்வது எவ்வாறு தொலைவது?

இவைகளை ஸாதுக்கள் யோசிக்கட்டும். நிற்க.

எமது ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் முன்னோர் சொன்ன தையும், சுருதியுக்திகளையுமொத்துக் கண்ணுக்கொளி யுண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/138&oldid=1590182" இலிருந்து மீள்விக்கப்பட்டது