பக்கம்:மறைமலையம் 26.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

183

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

முகவுரை

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே.”

"வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையுமென் உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியா மென்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன், குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே.”

இராமலிங்க அடிகள்)

சய்த

மாணிக்கவாசகப் பருமான் அருளிச் திருவாசகத்தென்றமிழ் மாமறையின் அளப்பரு மாட்சி யினை அளந்து கூறிய இராமலிங்க அடிகளின் மேலைத் திருச் செய்யுட்களால், திருவாசகத்தை உள்ளுணர்ந்து ஓதுவா ரெவராயிருப்பினும், அவர் வேறெங்குங் காணாத ஒரு பேரின்பம் எய்தித் தம் உடம்பும் உயிருமெல்லாம் அதன் வயமாய் நிற்கப் பெறுவரென்பதூஉம், மக்களாற் காணவுங் கருதவும் இயலாத இறைவனை அவர் எளிதிலே தமதகத்துக் கண்டு அவனோடு ஒருமைப்பட்டு நின்று பேரின்ப வாழ்விற் பிரிவின்றி வாழ்வரென்பதூஉம் நன்கு தெருட்டப்பட்டமை காண்க.

இங்ஙனமாகத், தன்னை ஓதுவா ருள்ளத்தையும் உணர்வையும் உயிரையுமெல்லாம் பேரின்ப வுருவாக்குந் திறம் ஏனை எந்த நுல்களுக்கும் வாயாமல் திருவாசகத்திற்கு மட்டும் வாய்த்ததென்னையெனின்; இவ் வுலக வாழ்க்கை யில் வரும் இன்ப நுகர்ச்சிகளில் எங்கும் புலனாகாத ஒரு பேரின்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/216&oldid=1590263" இலிருந்து மீள்விக்கப்பட்டது