பக்கம்:மறைமலையம் 26.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

189

இங்

வர்கள், பிறதுறையில் எவ்வளவுதான் சிறந்தவர்களாயினும், அவர்கள் பால் யாம் அப்பேரின்பச் செல்வத்தைப் பெறுதல்கூடுமோ? கூடாது. பெரும்பொற்றிரள் புதைந்ததோர் இடம் இக் கானகத்தின்கண் உளதென்று மட்டும் ஒருவாற் றானறிந்து, அதன்கண் அஃதுள்ள இடம் இதுதான் என்று குறித்துணரமாட்டாது அல்லும் பகலும் அப் பொருளுக்காக ஏக்கற்று நின்ற வருந்தும் ஒரு வறிஞன் மற்றையொரு வறிஞனுக்கு அதனை எடுத்துத்தர மாட்டுவனோ? ஙனமே கடவுளைக் காணப்பெறாத ஆசிரியர்களைப் பின்பற்றிச் செல்வாரெல்லாருந் தாம் கருதிய பயனைப் பெறாமல் ஏமாந்து, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினவரோடு ஒப்பத் தம் அரும்பெறற் பிறவிப்பயனையும் இழப்பர். “ஒருவன் உலகம் எல்லாம் பெற்றாலுந் தன் உயிரை இழந்து விடுவனாயின் யாது பயன்?” என்று மேனாட்டு ஆசிரியரொருவர் வினாவியாங்குக், கடவுள் அல்லாத மற்றைப் பொருள்களின் உண்மையெல்லாம் ஒருவன் ஓராசிரியர்பால் உசாவித் தெளிந்தானாயினுந், தன் னுயிர்க்குயிராய் பெருந்துணையாயிருந்து உதவுங் கடவுளின் உண்மைநிலையைத் தெளிந்திலனாயின், யாது பயன்? பொறுத்தற்கரிய விடாய்கொண்டு தீம்புனல்வேட்டு வருவான் ஒருவனுக்கு, அவன் வேண்டிய அந் நீரினைக் காட்டாமல், நீரின் நலங்களை மட்டும் விரித்து உரைத்துக் கொண்டிருப்பான் ஒரு பேதை எதிர்ப்படின், அவன் இவன் சொல்லை ஒரு பொருட்டாகக் கருதிக் கேட்டு நிற்பனோ? நில்லானன்றே; தான் வேண்டிய குளிர்ந்த நீர்நிலையைக் காட்டும் ஏனை யாருவனை நாடியேயன்றோ செல்வன். அதுவோல், நம்மைப் படைத்த நம் அப்பனைக் காணும் விழைவு மிக்கு அதனை ஆற்றாதே நிற்கும் நாமும், அவனைத் தாம் கண்டு நமக்குங் காட்டவல்ல உண்மை யாசிரியரைச் சார்ந்தன்றோ அப் பெறலரும் பேற்றைப் பெறுதல் வேண்டும்.

நின்று

பிறவிகடோறுந்

அத்தகைய உண்மையாசிரியன்மார்

தனக்குப்

மாணிக்க வாசகரும் அவர்க்குப்பின் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரருமேயாதலை அவர்கள் அருளிச்செய்த

திரு

வாசகந் தேவாரம் என்னும் அருட்செம் பாடல்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/222&oldid=1590269" இலிருந்து மீள்விக்கப்பட்டது