பக்கம்:மறைமலையம் 26.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

37

நிரூபிக்கவந்து ஒளிகள் வேறென்று கூறிக்கொள்ளும் இவரது நுட்பத்தைச் கற்றவர் நன்கு மதிப்பதெங்ஙனம்?

இவர் மனப்பாடஞ்செய்து ஒப்புவிக்கும் பாட மெல்லாம் ஜீவேசுவர ஜகத்துண்டா? இல்லையா? எனக் கேட்கில் அவை முற்றிலுமில்லையென் றுரைத்தல் கூடா தென்கிறார். பின்னரும் அது சத்துமல்ல, சித்துமல்ல, சத சத்துமல்ல, அநிர்வசனீய மென்கிறார். (வார்த்தையினால் வெளிப்படுத்த முடியாத தன்பது அதன் பொருளாம்.) அதனால் பொருளுள்ள

தென்பது நிச்சயமாகின்றது. வரை லக்ஷணவிவரம்

விரித்துரைக்கச் சொல்லி யாவர் கட்டாயப் படுத்தினார்? காற்று எவ்வண்ண மிருக்குமென்னுங் கடா நிகழுங்கால் அதற்கிணை யாய்ச் சொல்லத்தகும் பொருளின் மையால் அது இன்ன தன்மைத்தெனக் கூற வார்த்தை இடங் கொடுக்கவில்லை யென்றுதானே சொல்ல வேண்டும்? அதாவது அவர் கூறியபடி அநிர்வசனீயப் பொருளென்று தான் சொல்ல வேண்டும். அவ்வாறே பிரமத்தினது லக்ஷணங்களைப் பகுத்துரைக்க முடியாதாகையால் அதுவும் அநிர்வசனீயமாம். இதனாலே காற்றும் பிரமமும் இல்லை யென்ப தமையுமா? இவ்வுண்மை தேராது இதனைத் தாமாய்க் கூறிக் கொள்ளவில்லை யென்றும், வேதம் அவ்வாறு கூறுகிறதென்றும் சில உபநிஷத் வாக்கியங் களை யெடுத்துக் கூறித் தமது மதத்தை நன்கு புலப்படுத்தி நிற்கின்றார். வேதம் பொது நூலாதலால் பல பக்குவர்களுக்குரிய தங்களை ஆங்காங்கே வெளிப் படுத்தாநிற்கும். இவர் உபநிஷத்வாக்கியங்க ளிரண்டொன்றை அதனந்த ரங்கச் கருத்துணராமல் எடுத்து தகரிப்பதால் தம்மை வேதமெல்லாங் கரைகண்ட நிபுணரென்று யாவரு மதிப்பதாக எண்ணுகிறார். இவருக்கு வேதம் எத்துணையும் உபகரியா தென்க.

66

நாரதபரிவ்ராஜகோப நிஷத்து

ஈசுவரன் ஜீவன் இவர்கள் பிறப்பற்றவர்கள். பிறப்பற்ற வளாயும், ஒருத்தியாயுமிருக்கிற பிரமசத்தி யானவள் போக்தாக்களுடைய போகார்த்தமாய்ப் பிரவிருத்திக்கின்றாள்" என்று கூறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/70&oldid=1590111" இலிருந்து மீள்விக்கப்பட்டது