பக்கம்:மறைமலையம் 27.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் 27

-

உண்மைக்கு மாறாய் எல்லாரானும் நகையாடற் பாலதாய் முடியும். எவ்வாறெனின் எங்குமுள்ள விசும்பை நோக்கி இது கங்கைக்கரையிலிருந்தது ரையிலிருந்தது எனவும் எனவும் இது காவிரிக்கரை யிருக்கின்றதெனவும், இது குமரித்துறை யிலிருக்கு மெனவுங் கூறுவார் உலகில் இல்லையன்றே! அதுபோல எங்கும் நிறைந்திருக்கின்ற எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குக் காலமும் இடமும் இல்லை; அவன் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற் பட்டவனாவன்; அவன் அவற்றின் புறம்பே மட்டும் இருப்பான் அல்லன்; அவற்றின் உள்ளும்புறம்பும் அவற்றின் மேலும் நிறைந்திருப்பன் என்க. இது பற்றியன்றே தாயுமான சுவாமிகள்,

‘அங்கிங்கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்'

என்று திருவாய் மலர்ந்தருளியதூஉம், அருணந்தியடிகள் உலகினை யிறந்து நின்ற தரனுரு வென்ப தோரார்

66

உலகவ னுருவிற் றோன்றி யொடுங்கிடு மென்று மோரார் உலகினுக் குயிருமாகி யுலகுமாய் நின்ற தோரார்

கி

உலகினுள் ஒருவனென்ப ருருவினை யுணரா ரெல்லாம்

என்று கட்டளையிட்டருளியதூஉம் என்க. ஈசாவாசியோப நிடதமும் "ஒன்றாயுள்ள கடவுள் அசையாததாய் மனத்தைக் காட்டினும் விரை வானது; தேவர்களும் அதனை அணைவ தில்லை; முற்றொட்டே அஃது எல்லாவற்றினையுங் கடந்து நிற்பது; அது நிலையா யிருந்தே விரைந்தோடும் இவைகளாற் பற்றப்படாமல் இவற்றைக் கடந்து நின்றது; காற்றானது அதனிடத்திருந்து வினைகளைத் தாங்குகின்றது" என்றும் ‘அஃது அசைவது, அஃது அசைவதும் அன்று; அதுசேயது, அஃது அணிமை யிலும் உள்ளது; அஃது இதன் எல்லாவற்றின் அணிமையிலும் உள்ளும் உள்ளது; அஃது இவ் வெல்லாவற்றின் புறம்பும் உள்ளது; என்றும் கூறுகின்றது. ஆகவே, சிறுபான்மை இலக்கணந் தீண்டப் பெறாத கடவுளை யொழித்து அவ் விலக்கணந் தீண்டப் பெறுகின்ற சிற்றுயிர் ஒன்றே கால வேறுபாடு பொழுது வேறுபாடுகள் உடையதென்பது துணியப்படும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/129&oldid=1591099" இலிருந்து மீள்விக்கப்பட்டது