பக்கம்:மறைமலையம் 27.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம் பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை யுருக்கி யுள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த

செல்வமே சிவபெரு மானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.

185

என்று அருளிச் செய்தனர். இவ்வாறு தாயினுஞ் சிறந்த எளிமையனாய் இறைவன் எம்மனோர்க்கு அணித்தாய் நின்று அருள் செய்யும் இயல்பினை நம் சைவ சமய ஆசிரியன்மார் தளியக்கண் டுரைத்தாற்போல, ஆசிரியரும் உரைப்பக் காண்கிலம்.

இத்தகைய

முனைப்பினால்

அருட்டன்மை

ணர்வு

வேறெந்தச்

சமய

யுடையனல்லனாயிற்

கடவுளை நம்மனோர் வாழ்த்துதலும் வணங்குதலும் பயமில வாகும். இறைவன் தன்னியற்கையிலேயே அருட் டன்மை வாய்ந்தவனாய், அவ்வருட்டன்மையால் உந்தப் பட்டே எல்லார்க்கும் அண்ணியனாய்த் தனது பேரின்பத்தை வழங்கு தற்கு முன்னிற்றலினாலேதான், தமது உள்ளத்தே அவ் அருள் எழுப்பப்பட்டு எல்லாரும் இறைவனைப் பண்டுதொட்டே வணங்குதலும் வாழ்த்து தலுஞ் செய்து போதருகின்றார், கடவுளை ள எட்டா நிலைமைக்கண் வைத்துரைத்தலே சிறந்ததெனக் கொள்ளுங் காள்கையுடைய ய ஏனைச் சமயத்தவர்கள், அவன் நமக்கு அணுக்கனாய் வந்து அருள் செய்யும் அருட்பெருந் தன்மையன் என்பதைச் சிறிதும்அறியாதவர்களா யிருக்கின்றா ரென்று உணர்மின்கள்! இறைவன் சிற்றுயிர்களுக்குச் சேயனாயினும் அவர்கட்குத் தனது பேரின்பத்தை வழங்க வேண்டுமென்னும் பேரிரக்கமும் ஒருங்குடையனாகலின் அவன் அவர்கட்கு அண்ணியனுமாய்த்தான் வேண்டிய வறெல்லாம் இயங்கவல்ல னென்பதை உணராத சமயத்தவர் இறைவன்றன் உண்மைத் தன்மையையும் அவன்றன் அளவிலாற்றலையும் உணர்ந்தா ராவரோ சொன்மின்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/210&oldid=1591180" இலிருந்து மீள்விக்கப்பட்டது