பக்கம்:மறைமலையம் 27.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

கு.

66

9. அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்

இயலுண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும் இப்பொருள்அப் பொருளென்றே இசைப்பதென்னே பொதுவில் இறைவர்செய்யும் நிரதிசய இன்பநடந் தனைநீ

பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே

இராமலிங்க அடிகள்

இராமலிங்க அடிகளார் அருளிச் செய்த மேலைத் ருப்பாட்டினை மேற்கோளாக எடுத்துக் காண்டு அம்பலவாணர் திருக்கூத்தினுண்மையும் ஞானயோகமும் என்னும் எமது விரிவுரையினை நிகழ்த்துவான் புகுகின்றேம், அறிவில்லா எவ்வகைப்பட்ட பொருள்களினகத்தும் புறத்தும், அறிவுடைய எவ்வகையுயிர்களின் அகத்தும் புறத்தும் நிறைந்திருப்பதும்,இயற்கை யுண்மையும்இயற்கை யறிவும்

இயற்கை யின்பமும் உடையதாகி வாது இயங்குந்

திருக்கூத்தை இயற்றுவதும் ஆன உண்மைப் பொருளாஞ் சிவம் ஒன்றே முழுமுதற் கடவுளாகும் என்பதூஉம், இதனுண்மையை யுணர்ந்து அவ்வாற்றாற்சிவவயமாய் நின்றவர்க்குத்தாம் பேரின்பத்தை யடைந்த அவ்வளவில் மனவமைதி வராது தாம் பெற்ற பெறலரும் பேற்றை அது பெறாத ஏனை மக்களும் பெறும்படி அவர்க்கு அதனை யெடுத்துக் கூறும் அருளிரக்க முண்டாமென்பதூஉம், அங்ஙனஞ் சிவஞானிகளாயினார் கூறும் மெய்யுரையினை ஏற்று நலம்பெறும் நல்வினை வாயாதார் தமக்குள்ள ஆணவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/264&oldid=1591234" இலிருந்து மீள்விக்கப்பட்டது