பக்கம்:மறைமலையம் 27.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

சைவ சமயப் பாதுகாப்பு

காகம், உறவு கலந்துண்ணக்கண்டீர்! அகண்டாகாரசிவ போகம் எனும்பேரின்ப வெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழும்முன் புசிப்பதற்குச் சேரவாரும்! - செகத்தீரே!”

தாயுமான சுவாமிகள்

‘சைவசமயம்’ என்பது ‘சிவத்தை ஆராய்ந்து அறிந்த பொழுது அல்லது கொள்கை’ என்று பொருள்படும்; இந்தக் கொள்கையைப் பாதுகாத்துக் கொள்ளுதலே சைவ சமயப் பாதுகாப்பு ஆகும். உலகத்திலே அளவிறந்த கொள்கைகள் இருந்தாலும், அவையெல்லாவற்றுள்ளுங் கடவுளைப்பற்றிய கொள்கையே சமயம் என்று பெரும்பான்மையும் எல்லாராலுங் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் நிலையில்லாத வாழ்க்கை உடையராய் இருத்தலாலும், நோயுந் துன்பமுங் கவலையும் அடுத்தடுத்து வந்து அவரை வருத்துதலாலுந், தமக்குத் துணையாக நினைத்த மக்களுந் தம்மைப்போலவே நோய் முதலியவற்றால் வருந்தி நிலையின்றி மறைந்து போதலாலும் அவர் தம்மினுந் தம்மைப் போன்ற எல்லா உயிர்களினும் மேற்பட்டு உயர்ந்த ஒரு பேரறிவுப் பொருளான கடவுளின் துணையை நாடினவராய் இருக்கின்றார். கடவுள்

ல்லையென்று வலியுறுத்திப் பேசிவந்தவர்களுங் கூடப் பெருந்துன்பங்கள் வந்து தம்மை மூடிக்கொண்ட காலத்தில் தாம் கொண்ட கொள்கையைப் பிசகென உணர்ந்து கடவுளை நம்பத் தலைப்பட்டிருக்கின்றார்கள். கடவுளிடத்தில் நம்பிக்கை யில்லாத அருகரும், பௌத்தருங் கூடத் தமக்கு மேற்பட்ட துணையை நாடினவர்களாய்த் தம் குரவரையே கடவுளாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். தம்மையே கடவுளாக நினைப்பவர்களுங் கூடத் தமது

சமய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/308&oldid=1591278" இலிருந்து மீள்விக்கப்பட்டது