பக்கம்:மறைமலையம் 27.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சமயப் பாதுகாப்பு

285

அவரவரிடத்துள்ள சிற்சில சிறந்த தன்மைகளைக் கண்டும் வலிய செய்கைகளைக் கண்டும் முழுமுதற் கடவுளாகத் துணிந்து வணங்கி வருகின்றனர். நாடக அரங்கத்தில் அரசகோலந் தாங்கிவந்து ஆடுவோன் உண்மையில் அரசன் ஆகாமைபோல, இறைவனருளாற் சிற்சில உயர் நலச் செய்கைகளைப் பெற்றவர்கள் அவற்றால் அவ்விறைவனைப் போற் கருதப்படினும் அவர் உண்மையில் அவ்விறைவனாக மாட்டார். சைவசமயிகள் வணங்கி வருவது, இன்ப வடிவான கடவுளே யல்லாமற் பிற உயிர்களுள் ஒன்றும் அன்றென்பதற்கு அடையாளம் என்னென்றால், அன்பு அல்லது இன்பம் என் பொருள்படுஞ் சிவம் என்னுஞ் சொல்லையே முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராக வைத்து வழங்குவதும், அச் சிவத்திற்கு இறப்புப் பிறப்பு முதலான எவ்வகைத்துன்பமும் சிவபுராணங்களிற் படாமையுமேயாம்.

காணப்

இவ்வுண்மையை வலியுறுத்தும் பொருட்டே,

"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்று அத்தெய்வங்கள் வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையுஞ் செய்யும்; ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வனன்றே

று

என்பது சிவஞானசித்தியாரிலும் அருளிச் செய்யப்பட்டது. இங்ஙனம் இன்பவடிவாக விளங்கும் முதல்வனையே வணங்குஞ் சைவசமயிகள் எவ்வுயிர்க்கும் இன்பத்தையே செய்யக் கடமைப்பட்டவர்களா யிருத்தலால், இன்பத்திற்கு மாறான துன்பத்தைத் தருங்' கொலைத்தொழிலை எவ்வுயிர் களிடத்துஞ் செய்யாதவர்களாயும், அக் கொலைத் தொழி லால் வரும் ஊனைத் தின்னாதவர்களாயுஞ் சீவகாருணிய ஒழுக்கத்தில் தலைசிறந்து நிற்கின்றார்கள். சீவகாருணிய ழுக்கம் மற்றைச் சமயத்தவராலுங் கைக்கொள்ளப்படினும், அது சைவசமயி களுக்கே பழமைக்காலந் தொட்டுச் சிறந்த உரிமையாகி வருகின்றது. மற்றைச் சமயத்தவருந் தம்மிற் புலால் தின்னாத ஒருவரைப்பார்த்து ‘அவர் சைவராகி விட்டார்’ என்று சைவப்பெயராற் கூறுதலின், சீவகாருணிய வொழுக்கஞ் சைவசமயிகளுக்கே சிறப்புரிமைப் பொருளாய் விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/310&oldid=1591280" இலிருந்து மீள்விக்கப்பட்டது