பக்கம்:மறைமலையம் 28.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரலளவு

சிவஞான போத ஆராய்ச்சி

காண்ட தன

83

வைத்துக் கொள்வம். இப்பன்னீராயிரம் விரலளவுள்ள வழியின் சிறிய சிறிய ங்களையும் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு என்றற்றொடக்கத்தனவாக இலக்கங் குறித்து, அவ்வழியே பகட்டால் ஈர்க்கப்படும் பாண்டில் உருள்களின் புறச்சுற்று முழுதும் விரலளவு விரலளவு கொண்ட இடங்களாகப் பகுத்து அங்ஙனமே இலக்கங் குறித்துக் கொள்க. அதன் பின்னர் அப் பகட்டை உந்தி அப் பாண்டிலைச் செல்லவிடுத்துப் பார்ப்பின், உருளின் முதலிலக்கமிட்ட இடமும் வழியின் முதலிலக்கமிட்ட இடமும் தம்மிற் பொருந்தியது ஒருகால வெல்லையாம்; அங்ஙனமே இரண்டு மூன்று நான்கு முதலான அவ்விடங்கள் தம்மிற் சிறிது சிறிது பொருந்திக் கழிந்த அவையெல்லாம் தனித்தனிக் காலவெல்லைகளாம். உருளின் முதலிலக்கமும் வழியின் முதலிலக்கமும் தம்மிற் பொருந்திப் பின் இரண்டாம் இலக்கம் பொருந்துங் கால் முதலிலக்கம் இறந்த காலமாயிற்று; இரண்டும் இரண்டின் பின்னுள்ள இலக்கங் களும் வருங் காலமாம் இவ்வாறே இரண்டிலிருந்து மூன்றும் மூன்றிலிருந்து நான்கும் பொருந்தப் போங்காற் பொருந்திக் கழிந்த இரண்டு மூன்று முதலான இடங்கள் கழிந்த காலத்தினையும் இனிப் பொருந்துமிடங்கள் வருங்காலத்தி னையும் உற்று நோக்குவார் உணர்வின்கட் பயப்பிக்கும் இங்ஙனம் நுணுகி நோக்கவே, கழிந்தன வெல்லாம் இறந்த காலமும் இனி வருவனவெல்லாம் எதிர் காலமும் எனக் காலம் இரண்டாயே அடங்குமென்பதும் பெறப்படும். கால வெல்லையின் மிகச் சிறிய கூற்றினைப் பகுத்துக் காணுங்கால் நிகழ்காலமென வொன்றில்லை யென்னும் உண்மையும் புலனாகா நிற்கும். இது பற்றியே ஆசிரியர் சேனாவரையர் “தொழிலாவது பொருளினது புடைபெயர்ச்சி யாகலின் அஃதொரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சியென்பது அதற்கொன்று இல்லை”” என்றுரை கூறினார். அற்றேல், நூல் வழக்கினும் உலக வழக்கினும் நிகழ்காலம் என ஒன்று வழங்கி வருதறான் என்னை யெனின்; அடுத்தடுத்துக் கடுகி திகழும் பொருணிகழ்ச்சிக் கண் முன் நிகழ்ந்ததிது பின்னிகழ்வதிது வெனப் பிரித்தறிதல் ஏலாமையின் ஒரு தொகுதித்தாம் வினை நிகழ்ச்சி பற்றி நிகழ் காலம் என்பதும் ஒன்றுண்டென அவ்வாறு வழங்கி வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/108&oldid=1591438" இலிருந்து மீள்விக்கப்பட்டது