பக்கம்:மறைமலையம் 28.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

  • மறைமலையம்

28

தத்துவங்கள் முப்பதும் அறிவெய்தித் தமது முதற் காரணமான ஒரு பொருளின்கண் ஒடுங்கி நிற்குமென்பது தேற்றமாம். எனவே, காரியப் பொருள்களெல்லாங் கெட்டுத் தமது முதற்காரணத்தின்கட் சூக்கும வடிவாய் நிற்குமென்ப தூஉம் இதுகொண்டு முடிக்கப்படும். அற்றன்று, கட்புலனாய் நின்ற ‘குடம்' என்னுங் காரியப் பொருள் கெட்டவழி அது தன்னோடொற்றித்து நின்ற மண்ணென்னுங் காரணப் பொருளாய் ஒடுங்குமென்றலே வாய்ப்புடைத்தாமன்றி, அம்மண்ணுக்கும் ஒரு காரணம் தேடப்புக்கு அது ‘கந்தம் என்னும் தன்மாத்திரையேயா மென்றும், பின் அக்கந்தத் திற்குங் காரணம் பூதா தியாங்காரம்' ஆம் என்றும், புத்தி தத்துவத்திற்குக் காரணம் ‘குணதத்துவம்' ஆம் என்றும் இங்ஙனமே ஒவ்வொன்றற்குங் காரணம் தேடுவான் புகுதல் அநவத்திதை என்னுங் குற்றம் ஆமாலோ வெனின்; குற்றம் ஆமாறில்லை, என்னை? ஒன்று காரணமாயும் மற்றொன்று அதன் காரியமாயும் இங்ஙனம் ஒன்றோடொன்று ஒரு வரிசைப்படக் காரணகாரியத் தொடர்புபட்டு நிகழும் முறையில், அம்முறை வழியே இடைப்பட்ட காரணங்களை ஆராய்ந்து சென்று அவற்றிற் கெல்லாம் முடிந்த காரணமாய் நிற்ப தொன்றனைத் தெளிந்து கடைப்பிடித்தல் பொருளா ராய்ந்து உண்மை கடைப்பிடிக்கும் நெறியாமல்லது அஃது அநவத்திதை யென்னுங் குற்றமாதல் செல்லாமையின். எதுபோல வெனின், ஒரு பழத்தின் காரணத்தை ஆராய் தலுறு வானொருவன் அதற்கு முற்காரணம் பசுங்காய் ஆதலும்; அப் பசுங்காயின் காரணம் பிஞ்சாதலும்; பிஞ்சின் காரணம் பூவும், பூவின் காரணம் முகையும், முகையின் காரணம் தழையும், தழையின் காரணம் வளார் கோடுகவடு முதலியனவுமாதலும்; மேலும் இவற்றின் காரணம் பராரையும், பராரையின் காரணம் வேறும் ஆதலும்; இறுதியாய் வேருக்கும் வேரினின்று கிளைத்த மேற்கூறிய உறுப்புகட்கு மெல்லாம் அடிப்பட்ட காரணமாய் நிற்பது ‘வித்து’ ஆதலும் ஆராய்ந்து முடித்து, வித்தின் மேற் காரணம் பிறிதின்மையின் அதுவே முதற் காரணமாமென்று துணிவானாமதுபோல வென்பது.

G

அற்றாயின், ஐம்பெரும் பூதங்களும் ஐம்பொறிப் புலனாய் நின்ற தமது காரியவுருவங் கெட்டு ஒழிந்தவழி அவை பொறிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/121&oldid=1591451" இலிருந்து மீள்விக்கப்பட்டது