பக்கம்:மறைமலையம் 28.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

103

கெல்லாம் முதற்காரணப் பொருளான மாயையினிருப்பைப் பேரறிவு டையார் எவரேனும் மறுக்க முந்துவரோ? அது கிடக்க.

இனி எப்பொருளுக்குங் காரணம் கடவுளே யென மறைநூல் கிளத்தலின் இவ்வுலகங்களுக் கெல்லாம் முதற் காரணப் பொருள் முதல்வனே யாவனென அதற்கியையக் கூறுதலே சால்புடைத்தாமெனின்; அந்நூற் கருத்தறியாது கூறினாய்; காரணம் இனைத்தெனப் பாகுபடுத்துணர வல்லையாயின் இங்ஙனம் மயங்கியுரைப்பாய் அல்லை. ஆகலிற் காரணத்தின் பாகுபாடும் அவற்றின் இலக்கணமும் ஒரு சிறிது விளங்கக் காட்டுவாம். காரணத்தை நையாயிகரும் பிறரும் பலவகையாற் கூறுபடுத்து வழங்குவராயினும் அவை யெல்லாம் சாங்கியர் கூறுமாறே முதற்காரணம் நிமித்த காரணம் என்னும் இரண்டனுள் அடங்கும். அவற்றுள் முதற்காரணம் என்பது காரியத்தின் வேறன்றாய் அதனோடு பிரிவின்றி ஒன்றாய் நிற்பது; பணியின்கட் பொன்னும் குடத்தின் கண் மண்ணும் முதற் காரணப் பொருள்களாம். இனி நிமித்த காரணம் என்பது முதற் காரணப்

பொருளைத் திரிவுபடுத்திக் காரியப் பாருளாக்குவது; இந்நிமித்த காரணம் கருவியெனவுங் கருத்தாவெனவும் பெயர்ந்து மிரண்டாக வகுக்கப்படும்; அவற்றுட் கருவியென்பது முதற் காரணப்பொருள் காரியப்படுந் துணையும் அதனோடு டனாய் நின்று தொழிலியற்றும் அறிவில் காரணமாம், கருத்தாவென்பது அக்கருவியை முதற் காரணத்தோ டியைத்துக் காரியத்தைத் தோற்றுவிக்கும் அறிவுடைக் காரணமாம். பொன் பணியாந்துணையும் உதவியாக வேண்டப்படுங் கருவிகள் பட்டடையுஞ் சுத்தியலுங் குறடும் பிறவுமாகும், மண் குடமாந் துணையும் வேண்டப்படுங் கருவிகள் திரிகையுங் கோலும் பிறவுமாகும். இக்கருவிகள் அறிவில் பொருள்கள்; பொன்னைப் பணியாகவும் மண்ணைக் குடமாகவுந் திரிவுபடுத்துங் கருத்தாக்கள் முறை யே தட்டானும் குயவனும் ஆவர், இக் கருத்தாக்கள் அறிவு டைப் பொருள்கள். முதற்காரணப் பொருளைக் காரியப் பொருளாக்குஞ் செயல் கருவி கருத்தா இரண்டற்கும் ஒத்தலின் அவ்வொப்புமை பற்றி அவ்விரண்டும் நிமித்த காரணம் என்று ஒரு சொல்லான் வழங்கப்பட்டன. ஆகவே, எல்லாக் காரணங்களும் முதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/128&oldid=1591458" இலிருந்து மீள்விக்கப்பட்டது