பக்கம்:மறைமலையம் 28.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா ரு

சிவஞான போத ஆராய்ச்சி

107

உ ம்பிலுமிருந்து உரோமங்கள் தோன்றுமாறு போலவும் அழிவில்லாத இறைவனிலிருந்து உலகம் உண்டாகின்றது” என இவ்வுண்மையை இனி தெடுத்து விளக்கா நின்றது. இங்ஙனம் நிமித்த காரணப் பொருள் முதற்காரணப் பொருளோ ங்கியைந்து நின்று உலகங்களைத் தோற்றுவிக்கு முறைமையை ய உணர்த்துதற் கெழுந்த இம் மந்திரத்தின் நுண்பொருள் இதுவாதால் காண மாட்டாத ஏகான்ம வாதியருள் ஒரு சாரார் இவ்வுவமைகள் சித்திலிருந்து சடமும் சடத்தி லிருந்து சித்தும் தோன்று மாற்றைக் காட்டுதற்கு எழுந்தன வென்று தமக்குத் தோன்றியவாறெல்லாங் கூறி இழுக்கினார். சிலந்தியென்னும் உயிரினின்று நூல் தோன்றாமல் அது தன்போற் சடமாகிய அதன் உடம்பினின்று தோன்று தலும், ஓராண்மகன் உயிரிலிருந்து உரோமங்கள் முளையாமல் அவை தம்போற் சடமாகிய அவனது உடம்பினின்று தோன்று தலும், சாகாத விதையினின்று முளை கிளம்பு வதல்லாமல் செத்ததன்கண் அது வரக் காணாமையின் மயின் உயிருடை பொருளிலிருந்து முளையின் உயிரும் அவ் வுயிரைப் பொதிந்த விதையாகிய உடம்பிலிருந்து முளையாகிய உடம்பு முறை வழுவாது தோன்றுதலும் அவர் நுனித்துக் காண மாட்டுவ ராயின் சித்தினின்று சடமும் சடத்தினின்று சித்துந் தோன்று மெனக் கொள்ளும் தமது கோள் புரைபட்டு வழுவுடைத் தாதலை உணர்ந்து கொள்வர், என்று இத் துணையும் விதந்தொடுத்து விளக்கிய வாற்றான் எப்பொரு ளுக்குங் காரணங் கடவுளே என மறை நூல் கிளக்குமுரை கடவுள் நிமித்தகாரணனெனக் காட்டப் போந்ததேயல்லால் அவன் அவற்றிற்கெல்லாம் முதற்காரணமாவனென உணர்த்துதற்கு அன்றென்பது ஐயமின்றித் தெளியப்படும்.

ப்

இனிச் சித்தினின்று சடந் தோன்றாதென்பது காட்டப் பட்டமையின் முதல்வனிலிருந்து உலகங்காரியப்படாதென்னு முண்மை தழுவற்பாலதேயாம், மற்றுக் குயவனது நினைவின் வன்மையானன்றிக் குடம் என்பதொன்று ஆக்கப் படாமை போல இறைவனது நினைவின் வன்மை யானன்றி உலகமும் ஆக்கப்படாதாம்; ஆகவே, குயவனது நினைவே குடமாயிற் றெனல் வேண்டும், அதுபோல் இறைவனது நினைவாகிய சிற்சத்தியே உலகமாயிற்றெனக் கூறுதல் அமையுமாகலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/132&oldid=1591462" இலிருந்து மீள்விக்கப்பட்டது