பக்கம்:மறைமலையம் 28.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

சிவஞான போத ஆராய்ச்சி

6

141

மொழி ஒளியினை உணர்த்து மாறு, இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்ட தால் காப்பி யத்தின் கட் சொல்லதிகாரத்தில் “எல்லே இலக்கம்” என்று உரைக்கப் பட்ட மையாற் கண்டு கொள்க. இலக்கம் இலங்கும் ஒளி என்னும் பொருட்டாகலின் அப் பொரு டோன்ற இறைவன், ‘எலியன்’ என்று வழங்கப்பட்டான். மகமது முனிவர்க்கு முன்னிருந்த அராபியர் என்னும் மக்கள் தாம் முதற்கடவுட்குப் பெயராக வழங்கிய ‘அல்லா' என்னுஞ் சொல்லும் இவ் 'எல்' என்னுஞ் சொல்லின் திரிபேயாம் என்று இதனுண்மையை ஆராய்ந்து கண்ட புலவர் கூறா நிற்கின்றனர். அல்லதூஉம், 'அலரி' என்னும் ஒரு பழந் தமிழ்ச் சொல்பகலவன் மேற்றாதல் திவாகரம் முதலான பண்டைத் தமிழ் நூல்களுள்ளுங் காணப்படும். அதனானும், அல் என்னும் முதனிலைப் பெயர் ஞாயிற்றின் மேற்றாதல் துணியப்படுதலின், அல்லா என்னும் அம்மொழி ஞாயிற்றினுள் விளங்கும் முதல்வற்குப் பெயராய் அதனினின்று பிறந்ததென்று நேரே கோடலும் ஒன்று. அராபியர் பினீசியரி ருந்த நாட்டை அடுத்துள்ள தேயத்தில் உறைந்தவராய் அவர் தம் நாகரிக நலங்களை ஏற்று உயிர் வாழ்ந்தவராய்ப் போந்தமையின் இவரும் அவர் கடவுட்கிட்ட பெயரையே சிறந்ததாகக் கொண்டு தாமும் வழங்கினா ரென்று கடைப்பிடித்தல் வேண்டும். மகமது சமயத்தார்க்குக் கழிபெருஞ் சிறப்புடைய திருக்கோயில் அமைந்த மெக்கா நகரத்தில் தமக்கு முன்னிருந்தோரால் வழிபாடு செய்யப் பட்ட சிறுதெய்வ அடையாளங்களான கல்வடிவங்களை யெல்லாம் தகர்த்தெறியும்படி மகமது முனிவர் அறிவுறுத்தி அங்ஙனமே செய்து வந்தாராயினும், மெக்கா நகரின் நடுவணுள்ள திருக்கோயிலிற் பண்டு தொட்டு முழுமுதற் கடவுளின் திருவடையாளமாக நிறுத்தப்பட்டிருந்த குவிந்த கருங்கல் வடிவத்தை மட்டும் அங்ஙனந் தகர்க்க உரையாமல் அதனை அங்ஙனமே யிருக்க வைத்து அதன்கண் அன் போடும் வழிபாடு புரிந்து வரலானார். அதனான், முழுமுதற் கடவுட்கு மாறான சிறுதெய்வ வடிவங்களைத் தொழுதல் சிறிதுமாகா தென்பதூஉம், ஒரு தனிமுதற் கடவுட்கு அடை யாளமாக நிறுத்திய குவிந்த கல்வடிவினை வணங்கல் ஒரு வாற்றானுங் குற்றமாகாமற் பெரிதும் வாய்ப்புடைத்தேயா மென்பதூஉம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/166&oldid=1591497" இலிருந்து மீள்விக்கப்பட்டது